செவ்வாய், 9 ஜனவரி, 2018

ரூ.4 ஆயிரம் வாங்க முயன்ற கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தின் செயலாளர் சுந்தர்ராமனை கையும்

<>ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் ஓய்வுபெற்ற அரசு அதிகாரிக்கு 21 மாதம் சிறைத் தண்டனை விதித்து திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. டிசம்பர் 06, 2017, 04:30 AM திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த குமங்கலம் பார்த்தசாரதி கோவில்தெருவை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி புவனேஸ்வரி (வயது 42). இவர், பொன்னேரியில் உள்ள கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் தனது வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து கடந்த 2006–ம் ஆண்டு ரூபாய் 20 ஆயிரம் கடன் பெற்றார். அதற்கு அவர் சரியான முறையில் மாதாமாதம் செலுத்த வேண்டிய தவணைத் தொகையை செலுத்தாமல் இருந்துள்ளார். பின்னர் கடந்த 2008–ம் ஆண்டு, தான் செலுத்த வேண்டிய ரூ.20 ஆயிரம் கடனுக்கு வட்டியுடன் சேர்த்து ரூ.67 ஆயிரத்தை பொன்னேரியில் உள்ள கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் அவர் செலுத்தினார். இதைத்தொடர்ந்து புவனேஸ்வரி தன் வீட்டு பத்திரத்தை வாங்குவதற்காக சென்றபோது அங்கிருந்த செயலாளரான சுந்தர்ராமன், அடமானம் வைத்த வீட்டு பத்திரத்தை தரவேண்டுமானால் தனக்கு ரூ.14 ஆயிரம் தரவேண்டும் என லஞ்சம் கேட்டுள்ளார். மேலும் அதில் முதல் தவணையாக ரூ.4 ஆயிரத்தை தருமாறு கேட்டார். லஞ்சம் கொடுக்க விரும்பாத புவனேஸ்வரி இதுபற்றி சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார். அதைத்தொடர்ந்து போலீசார் 19–6–2009 அன்று லஞ்சப்பணம் ரூ.4 ஆயிரம் வாங்க முயன்ற கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தின் செயலாளர் சுந்தர்ராமனை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கின் மீதான விசாரணை திருவள்ளூரில் உள்ள மாவட்ட தலைமை குற்றவியல் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி, குற்றம் நிரூபிக்கப்பட்டதால் சுந்தர்ராமனுக்கு 21 மாத சிறைத் தண்டணையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் 6 மாத சிறைத் தண்டணை அனுபவிக்கவேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீலாக அமுதா வாதாடினார். கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் செயலாளராக பணியாற்றிய அதிகாரி சுந்தர்ராமன் 3 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 9 டிசம்பர், 2015

50000 வீடுகளை கட்டுகிறது இந்தியா

இலங்கையில் இடம்பெயர்ந்த மக்களுக்காக 50000 வீடுகளை கட்டுகிறது இந்தியா
 
இலங்கையில் இடம்பெயர்ந்த மக்களுக்காக 50000 வீடுகளை கட்டுகிறது இந்தியா
புதுடெல்லி, டிச. 8-

இலங்கையில் நடைபெற்ற போரின்போது உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்த மக்களுக்காக இந்தியா 50 ஆயிரம் வீடுகளை கட்டிக்கொடுக்க உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய உள்துறை இணை மந்திரி கிரண் ரிஜிஜு இத்தகவலைத் தெரிவித்தார்.

“இலங்கையில் இடம்பெயர்ந்தோருக்கு புதிய வீடுகள் கட்டுதல் மற்றும் சேதமடைந்த வீடுகளை சீரமைத்தல் ஆகிய பணிகள் நடைபெறும். இதற்கான பயனாளிகளை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாடு மற்றும் ஒடிசா மாநிலங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, நாட்டில் தற்போது 101368 இலங்கை தமிழ் அகதிகள் தங்கியிருக்கிறார்கள். இலங்கை அரசாங்கம், உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்த மக்களுக்காக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 2000 ஏக்கர் நிலங்களை விடுவித்துள்ளது” என்றும் மத்திய மந்திரி தெரிவித்தார்.




CLOSE

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

குடிமக்கள் அநியாயமாக குறிவைக்கப்படுகிறார்கள்: கார்களை கட்டுப்படுத்தும் டெல்லி அரசின் திட்டத்தை எதிர்த்து வழக்கு

டெல்லியில் ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி அரசு சில நாட்களுக்கு முன் காற்று மாசு மற்றும் ....»

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015

கல்விக் கடனுக்கான மானியத் தொகை ரூ.392 கோடி



Published: August 21, 2015 09:28 IST Updated: August 21, 2015 09:28 IST

கல்விக் கடனுக்கான மானியத் தொகை ரூ.392 கோடியை வங்கிகளுக்கு வழங்க மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஒப்புதல்

குள.சண்முகசுந்தரம்
தவணை விடுப்பு காலத்தில் கல்விக் கடனுக்காக மத்திய அரசு, வங்கிகளுக்குச் செலுத்தாமல் வைத்திருந்த சுமார் ரூ.392 கோடியை வழங்க ஒப்புதல் தெரிவித்து மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 01.04.2009 முதல், மாணவர்கள் படிக்கும் காலத்திலும் படிப்பு முடிந்து ஓராண்டு தவணை விடுப்பு காலத்திலும் கல்விக் கடனுக்கான வட்டியை மத்திய அரசே செலுத்தி வருகிறது. ஆனா லும் பெரும்பாலான வங்கிகள் மாணவர்களிடமும் வட்டி வசூலிக் கின்றன. மத்திய அரசு, வட்டி மானியத் தொகையை முறையாக வழங்காததாலேயே மாணவர் களிடம் வட்டியை வசூலிப்பதாக வங்கிகள் தரப்பில் சொல்லப்படு கிறது.
இது தொடர்பாக மத்திய அர சுக்கு ஏராளமான புகார்கள் குவிந் தன. நீதிமன்றங்களிலும் வழக்கு கள் தொடரப்பட்டு நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், கல்விக் கடன் குளறுபடிகளை சீர்செய் வதற்காக நாடு முழுவதும் விரி வான சர்வே ஒன்றை நடத்தியது மத்திய அரசு. அதன் அடிப்படையில் கல்விக் கடன் திட்டத்தை முறைப் படுத்த அடுத்தகட்ட நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு வருகின் றன.
முதல் கட்டமாக, வங்கிகளின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக, இதுவரை வழங்கப்படாமல் நிலுவையில் இருந்த சுமார் ரூ.392 கோடியை உடனடியாக வங்கிகளுக்கு வழங்க நேற்று ஒப்புதல் வழங்கி இருக்கிறார் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் துணைச் செயலாளர் எஸ்.ஷங்கர்.
இதன்படி, 01.04.2009 முதல் 31.03.2014 வரை தலித் மாணவர் களின் கடனுக்கான வட்டி மானி யத்துக்காக ரூ.35 கோடியையும் இதே காலகட்டத்தில் கடன்பெற்ற பழங்குடியின மாணவர்களின் கடனுக்கான வட்டி மானியத்துக்காக ரூ.15 கோடியையும், பிற மாணவர் களின் வட்டி மானியத்துக்காக ரூ.222 கோடியே 5 லட்சத்து 71 ஆயிரத்து 859 ரூபாயையும் உடனடியாக விடுவிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதே போல், 01.04.14 முதல் 31.03.15 வரை புதிதாக வழங்கப்பட்ட கல்விக் கடனுக்கான வட்டி மானியத் தையும் உடனடியாக வங்கிகளுக்கு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள் ளது. இதன்படி, தலித் மாணவர் களுக்காக ரூ.100 கோடியும் பழங்குடியின மாணவர்களுக்காக ரூ.20 கோடியும் கல்விக் கடன் மானியமாக வழங்கப்படும். இந்தக் காலகட்டத்தில் கடன்பெற்ற பிற சாதியினருக்கான வட்டி மானி யத்தை அளிப்பது குறித்து அந்த உத்தரவில் தகவல் எதுவும் இல்லை.
மத்திய அரசால் விடுவிக்கப்படும் வட்டி மானியத் தொகையானது கல்விக் கடனுக்கான முன்னோடி வங்கியான கனரா வங்கிக்கு அனுப்பி வைக்கப்படும். மற்ற வங்கிகள் தங்களுக்கான மானியத் தொகையை கனரா வங்கி மூலம் பெற்றுக்கொள்ள வேண்டும். மாணவர்களும் வங்கிகளும் இந்த இறுதி வாய்ப்பை சரியாக பயன் படுத்திக் கொள்ளும்படியும் இந்திய வங்கிகள் சங்கம் இதுகுறித்து பொதுமக்கள் மத்தியில் விளம் பரப்படுத்தும்படியும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
அரசின் இந்த நடவடிக்கை குறித்து பேசிய வங்கியாளர்கள், ‘‘ஏற்கெனவே சுமார் ரூ.5,000 கோடி ரூபாயை மத்திய அரசு வட்டி மானியமாக வழங்கி இருக்கிறது. இந்த நிலையில் தற்போது விடுவிக்கப்படும் ரூ.392 கோடி மூலம் கல்விக் கடன் பிரச்சினையில் உள்ள குளறுபடிகள் பெருமளவு சரிசெய்யப்படும்’’ என்கிறார்கள்.
மத்திய அரசால் விடுவிக்கப்படும் வட்டி மானியத் தொகையானது கல்விக் கடனுக்கான முன்னோடி வங்கியான கனரா வங்கிக்கு அனுப்பி வைக்கப்படும்.
Printable version | Aug 25, 2015 8:24:59 PM | http://tamil.thehindu.com/opinion/reporter-page/கல்விக்-கடனுக்கான-மானியத்-தொகை-ரூ392-கோடியை-வங்கிகளுக்கு-வழங்க-மனிதவள-மேம்பாட்டு-அமைச்சகம்-ஒப்புதல்/article7565028.ece

புதன், 19 ஆகஸ்ட், 2015

கூட்டுறவு வீட்டுவசதித் துறையின் அமைப்பு

கூட்டுறவு வீட்டுவசதி



கூட்டுறவு வீட்டுவசதித் துறை

அலுவலகத்தின் பெயர்
துணைப்பதிவாளர் (வீட்டுவசதி)
அலுவலக முகவரி
துணைப்பதிவாளர் (வீட்டுவசதி)
10 A/7, சிங்கம் பில்டிங்
திருவனந்தபுரம் ரோடு
திருநெல்வேலி -2.
தொலைபேசி எண்
0462-2502191
முன்னுரை 
வீடு இல்லாத மக்களுக்கு மனை வாங்கி வீடு கட்டவும் வீட்டினை அபிவிருத்தி செய்யவும், புதுப்பிக்கவும் வீடு கட்டும் சங்கங்கள் கடன் வழங்கி வருகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 17 கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.
கூட்டுறவு வீட்டுவசதித் துறையின் அமைப்பு 
மாநில அளவில் வீட்டுவசதி சங்கங்கட்கு பதிவாளர் வீட்டுவசதி அவர்கள் உள்ளார். அன்னாரது கட்டுப்பாட்டில் 11 மண்டல துணைப்பதிவாளர் வீட்டுவசதி அலுவலகங்கள் உள்ளன. திருநெல்வேலி மண்டல துணைப்பதிவாளர் வீட்டுவசதி அவர்கள் கட்டுப்பாட்டில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் அடங்கியுள்ளன. மேற்படி வீட்டுவசதி சங்கங்கட்கு கடன் வழங்குகின்ற நிறுவனமாக தமிழ்நாடு மாநில கூட்டுறவு வீட்டுவசதி இணையம் சென்னையில் உள்ளது. மேற்படி இணையத்திலிருந்து கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் கடன் பெற்று மக்களுக்கு வழங்குகின்றன.
கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களில் கடன் வழங்கும் திட்டங்கள்
வீட்டுவசதி சங்கங்களில் மூன்று விதமான கடன் திட்டங்கள் வழியாக பொது மக்களுக்கு கடன் வழங்கப்படுகிறது.
1) குறைந்த வருவாய் பிரிவினர் LIG
இப்பிரிவில் மிக குறைந்த வருவாய் உள்ள மக்களுக்கு ரூ.1 இலட்சம் வரை வீட்டுவசதி கடன்கள் வழங்கப்படுகிறது.
2) நடுத்தர வருவாய் பிரிவினர் MIG
நடுத்தர பிரிவு மக்களுக்கான இத்திட்டத்தில் ரூ.2 இலட்சம் வரை பொதுமக்களுக்கு வீட்டுவசதி கடன்கள் வழங்கப்படுகிறது.
3) உயர் வருவாய் பிரிவினர் HIG
உயர் வருமானம் பெறும் மக்களுக்கு ரூ.7.00 இலட்சம் வரை இத்திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக வீட்டுவசதி சங்கங்களில் எவ்வித கடனும் வழங்கப்படவில்லை.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் 
நகர கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள்
  1. தூத்துக்குடி என்.ஜி.ஓ. கூட்டுறவு வீட்டுவசதி சங்கம்
  2. தூத்துக்குடி மேலூர் கூட்டுறவு வீட்டுவசதி சங்கம்
  3. தூத்துக்குடி கூட்டுறவு வீட்டுவசதி சங்கம்
  4. நாசரேத் கூட்டுறவு வீட்டுவசதி சங்கம்
  5. கோவில்பட்டி வ.உ.சி. கூட்டுறவு வீட்டுவசதி சங்கம்
  6. கோவில்பட்டி கூட்டுறவு வீட்டுவசதி சங்கம்
  7. ஆறுமுகனேரி காயல்பட்டினம் கூட்டுறவு வீட்டுவசதி சங்கம்
  8. உடன்குடி கூட்டுறவு வீட்டுவசதி சங்கம்
வட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கம்
  1. தூத்துக்குடி வட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கம்
  2. திருச்செந்தூர் வட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கம்
  3. கோவில்பட்டி வட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கம்
  4. விளாத்திகுளம் வட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கம்
  5. திருவைகுண்டம் வட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கம்
  6. சாத்தான்குளம் வட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கம்
  7. ஒட்டப்பிடாரம் வட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கம்
  8. எட்டையபுரம் வட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் 

கடன் செலுத்த வேண்டும்

திங்கள், 27 ஜூலை, 2015

கூட்டுச்சதி மூலம் ரூ.74 லட்சம் மோசடி செய்த அதிகாரிகள்ரூ.4 கோடி கடனில் மூழ்கிய கூட்டுறவு வீட்டுவசதி சங்கம்

http://www.dinamalar.com/index.asp( Updated :20:44 hrs IST )
சனி ,ஜூலை,25, 2015
ஆடி ,9, ம





ராசிபுரம்:ராசிபுரம் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம், நான்கு கோடி ரூபாய் அளவிற்கு கடனில் மூழ்கிய நிலையில், அதிகாரிகளின் கூட்டுச்சதியால், 74 லட்சம் ரூபாய் மோசடி நடந்தது அம்பலமாகியுள்ளது. இதுதொடர்பாக, இருவர் கைது செய்யப்பட்டனர்.கடந்த, 1991ம் ஆண்டு, ராசிபுரம் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் துவங்கப்பட்டு, இதில், 395 ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர். இவர்களுக்கு, நிலம் வாங்கி வீட்டுமனை பிரித்து கொடுக்க, ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, 160 பேர் மனைக்காக, முன்பணமாக தலா, 25 ஆயிரம் ரூபாய் செலுத்தினர்.இதில், ராசிபுரம் சிவானாந்தா சாலையில், 7.85 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு, எவருக்கும் நிலம் பிரித்து தரவில்லை. 2002ம் ஆண்டு, மார்ச் மாதம், சங்கத்தின் விதிமுறைக்கு எதிராக, 600க்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர்களை, தனி அலுவலர் திருப்பதி, செயலாளர் வேலாயுதம் ஆகியோர் போலியாக சேர்த்தனர்.
அவர்களிடம் இருந்து, ஒவ்வொரு உறுப்பினரிடம் இருந்தும், தலா ஒரு லட்சம் கடன் பெற்றுத் தருவதாக கூறி, கூட்டுறவு இணையத்தில் இருந்து, நான்கு கோடி ரூபாய் பெற்று, உறுப்பினர்களுக்கு பாதியளவு கடன் கொடுத்தனர். இதற்காக, இணையத்திடம் போலியான ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டது.
இந்த முறைகேடுகள் தொடர்பான புகார்கள், மாநில கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் வரை சென்றும், 2003ம் ஆண்டு முதல், நடப்பாண்டு வரை, முறையான தணிக்கைக்கு உட்படுத்தவில்லை. 2003ம் ஆண்டு தனி அலுவலராக இருந்த ஜெகநாதன், 2009ம் ஆண்டு, தனி அலுவலராக பொறுப்பேற்ற அரூர் தனசேகரன் ஆகியோர், ஏற்கனவே நடந்த மோசடி வேலைகளோடு கூட்டுச்சதி செய்து, அவர்களும், பல லட்சம் ரூபாய் மோசடி செய்தனர்.இதற்கிடையே, 2010ம் ஆண்டு, செயலாளர் வேலாயுதம், தனி அலுவலர் ஜெகநாதன் ஆகியோர், போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். அதன்பின், தனி அலுவலர் என்ற பதவி மாற்றப்பட்டு, ஃபோர்டு நிர்வாகம் வந்ததால், சங்கத்தின் செயல்பாடுகள் முழுமையாக முடங்கிப் போனது. ஏற்கனவே, போலி உறுப்பினர்களால் நான்கு கோடி ரூபாய் கடனும், திரும்ப பெற முடியாத நிலை உள்ளது.
இந்நிலையில், 2011ம் ஆண்டு சங்கத்தின் தனி அலுவலர் மற்றும் முறைகேடுகளை விசாரிக்கும் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட தனசேகரன், சேலம் மண்டல கூட்டுறவு சங்க துணை பதிவாளர் (வீட்டுவசதி) சேகரிடம், பல்வேறு முறைகேடுகள் தொடர்பான புகாரை கொடுத்தார்.
அவர், சேலம் வணிக குற்றப்புலனாய்வு போலீஸாரிடம் கொடுத்த புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சங்கத்தின் முன்னாள் செயலாளர் வேலாயுதம், தனி அலுவலர் ஜெகநாதன் ஆகிய இருவரையும், நேற்று முன்தினம் இரவு கைது செய்து விசாரிக்கிறார். மேலும், தலைமறைவாக உள்ள முன்னாள் தனி அலுவலர்கள் அரசு, அரூர் தனசேகரன் ஆகியோரை, போலீஸார் தேடி வருகின்றனர்.
ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் கூட்டுறவு வீட்டு வசதி சங்க தலைவர் மதியழகன் கூறியதாவது:கூட்டுறவு இணையத்தின் மூலம் பெறப்பட்ட கடன், நான்கு கோடி ரூபாய் வசூலிக்க முடியாமல் உள்ளது. இதில், 300 உறுப்பினர்கள் கடனாகவும், 160 உறுப்பினர்கள் நிலத்தின் மீதும் கடன் பெற்றனர். தற்போது, சங்கம் நஷ்டத்தில் செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

மோகன் பியாரே, வீட்டுவசதி துறை

பின்னணி என்ன? மோகன் பியாரே, வீட்டுவசதி துறை செயலராகவும், சி.எம்.டி.ஏ., துணை தலைவர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வந்தார். இந்த பதவி காலத்தில், விதிமீறல் கட்டடங்களை வரன்முறை செய்யக் கோரும் மனுக்களை ஆய்வு செய்வதற்கான மேல்முறையீட்டு குழு கூட்டங்களில், பெரும்பாலான தனியார் கட்டடங்களை வரன்முறை செய்ய ஒப்புக்கொள்ளாதது, பல்வேறு தரப்பினருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், சி.எம்.டி.ஏ.,வில் நடந்த நிர்வாக குளறுபடிகளை கண்டித்தது, மவுலிவாக்கம் கட்டட விபத்து வழக்கில் இவர் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டிருந்த விவரங்களால், சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது.தற்போதைய இடமாற்றத்தின் பின்னணியில் இக்காரணங்களும் இருக்கலாம் என வீட்டுவசதித் துறை வட்டாரங்களில் பேசப்படுகிறது.http://www.tamilmithran.com/article-source/MjQ0MDc=/தலைமை-செயலர்-உட்பட-12-அதிகாரிகள்-மாற்றம்:-பதவி-ஏற்ற-60-நாட்களுக்குப்பின்-ஓ.பி.எஸ்.,-வேகம்

salem p.h salem d/r


சனி, 25 ஜூலை, 2015

Co operative Housing Loan Interest Cancellation welfare Association Demonstration 06 08 2014 Inter 00:42






காரைக்கால் நகர மனிதநேய மக்கள் கட்சி - மாபெரும் அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம்

கூட்டுறவு வீட்டு வசதி சங்க வட்டி மற்றும் அபராத வட்டிகளை தள்ளுபடி செய்ய வேண்டும்
7. கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் அறிவித்தபடி கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் உறுப்பினர்களால் பெறப்பட்ட கடன்களின் மீதான வட்டி மற்றும் அபராத வட்டிகளை தள்ளுபடி செய்யவும், மேலும் குறைந்த வருவாய் பிரிவினர் கூட்டுறவு சங்கங்களின் மூலம் பெறப்பட்ட தவணை கடந்த அசலை 1 லட்சம் வரை தள்ளுபடி செய்வதற்கு உண்டான அறிவிப்பினை நடைமுறைப்படுத்த அரசானை வெளியிட வேண்டும் என புதுவை முதல்வர் அவர்களை மனிதநேய மக்கள் கட்சி கேட்டு கொள்கிறது.சனிக்கிழமை,  25 ஜூலை, 2015

பத்திரம் தராமல் மோசடி

வினவுhttp://www.vinavu.com/2013/04/17/gujarat-family-self-immolation/

மிழ்நாட்டில ஜனநாயகமே இல்லை. சாதாரண மக்களுக்கு எந்த நாதியும் இல்லை. இந்த லோக்கல் கட்சிகளை எல்லாம் ஒழிச்சாத்தான் நமக்கு விமோச்சனம். காங்கிரஸ் ஊழலின் உருவம். தேசியக் கட்சியான, தேச பக்த கட்சியான பாரதீய ஜனதா கட்சியை, குஜராத்தில் முன்னுதாரண ஆட்சி நடத்திக் காட்டியிருக்கும் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சியில அமர்த்தினாத்தான் நாடு உருப்படும்.” இது நரேந்திர மோடி ரசிகர்களின் அங்கலாய்ப்பு.
குஜராத்தில் என்ன நிலைமை என்று பார்ப்போம்.
35 ஆண்டுகளாக ஒரு ஏழைக் குடும்பம் வசித்து வந்த இடத்தை பிடுங்குவதற்காக மேட்டுக்குடி வர்க்கத்தினரும், உள்ளூர் அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும், நீதிமன்றமும் சேர்ந்து நடத்திய அராஜகங்களை பின் வரும் கட்டுரை விவரிக்கிறது.
காங்கிரஸ் ஆண்டாலும் சரி, பா.ஜ.க. ஆண்டாலும் சரி, மாநிலத்தில் அ.தி.மு.க.வோ, தி.மு.க.வோ எந்த ஓட்டுப் பொறுக்கி கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சரி இன்றைய போலி ஜனநாயக அரசமைப்பில் ஏழை, எளிய மக்களுக்கு எந்த நியாயமும் கிடைக்க வழியில்லை என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது.
35 ஆண்டு காலமாக வாழ்ந்த இருப்பிடம் அநியாயமாக பிடுங்கப்பட்ட அநீதியை எதிர்த்து ஒரு குடும்பமே கூட்டாக தற்கொலை செய்து கொண்டுள்ளது. மனதை நொறுக்கும் இந்த தற்கொலை குஜராத் மாநிலத்தை சேர்ந்த ராஜ்கோட்டில் கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி நடந்தது.
நேபாளத்தை சேர்ந்த மான்சிங் என்பவர் ராஜ்கோட்டிலுள்ள ரையாதர் பகுதியில் உள்ள சோட்டுநகர் கூட்டுறவு வீட்டு வசதி குடியிருப்பில் செக்யூரிட்டியாக பணிபுரிந்தவர். தங்கியிருந்து வேலை பார்ப்பதற்காக, குடியிருப்பு சங்கத்தினால் அவருக்கு 1978 ஆம் ஆண்டு 900 சதுரஅடி இடம் வழங்கப்பட்டுள்ளது. மான்சிங் அந்த இடத்தில் சிறிய வீடு கட்டிக்கொண்டு தன் குடும்பத்தாருடன் 35 ஆண்டுகளாக வாழ்ந்து வந்துள்ளார்.
6 வருடங்களுக்கு முன் மான்சிங் காலமானார். அதற்கு பிறகு அங்கு தொடர்ந்து வசித்துவந்த குடும்பத்தினரை வீட்டை விட்டு உடனே காலி செய்யவேண்டும் என்று சோட்டுநகர் வீட்டு வசதி கூட்டுறவு சங்கம் உத்தரவிட்டது; அதை ஏற்றுக் கொள்ளாத மான் சிங் குடும்பத்தினருக்கு மின்சார இணைப்பை வெட்டுவது, தண்ணீர் தர மறுப்பது என்று பல தொல்லைகளை அளித்திருக்கின்றனர்.
2012 மே மாதம் சோட்டுநகர் வீட்டு வசதி சங்கம், மான்சிங் குடும்பம் ஒதுக்கப்பட்ட இடத்தைவிட அதிக அளவு இடத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளதாக ராஜ்கோட் நகராட்சிக்கு பொய் புகார் அனுப்பியது. நகரட்சி மான் சிங் குடும்பத்துக்கு இடத்தை விட்டு வெளியேறக்கோரி நோட்டீஸ் அனுப்பியது.
மான்சிங் குடும்பத்தினர் இடத்தை விட்டு உடனே வெளியேறவில்லை என்றால், அவர்களது வீடு ஏழு நாட்களுக்குள் தரைமட்டமாக்கப்படும் என்று மேலும் ஒரு நோட்டீஸில் ஆகஸ்ட் மாதம் பீதியூட்டப்பட்டது. ‘1978-ல் மான் சிங்கிற்கு வீட்டு வசதி கூட்டுறவு சங்கம் வழங்கி கடந்த 35 ஆண்டுகளாக தாங்கள் வசித்து வரும் இடம் தங்களுக்கே உரிமையானது’ என்று மான்சிங்கின் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
self-immolation-2ஏப்ரல் 2 ஆம் தேதி நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது. அதை அறிந்த குடும்பத்தினர், இதற்கு மேலும் வாழ்க்கையை எப்படி எதிர் கொள்வது என்ற விரக்தியோடு ராஜ்கோட் நகராட்சி அலுவலகத்திற்கு வந்து மண்ணெண்ணைய் ஊற்றி பற்ற வைத்துக் கொண்டனர்.
தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட மான் சிங்கின் மகன் பரத் (40), அவரது மனைவி ஆஷா (35), மான் சிங்கின் இளைய மகன் கிரீஷ் (27) ஆகிய மூவரும் சம்பவத்தன்றே உயிரிழந்தனர். மான்சிங்கின் மனைவி வசுமதி (60), மகன் மகேந்திராவின் மனைவி ரேகா (35) ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 5 நாட்களுக்குப் பிறகு இறந்து விட்டனர்.
பத்திரிகையாளர்களிடம் பேசிய கிரீஷின் மனைவி கௌரி, ‘வீட்டு வசதி சங்கத்தினரும் அப்பகுதியில் செல்வாக்கு பெற்ற அரசியல்வாதிகளும், மான் சிங்கின் குடும்பத்தை தொல்லைகளுக்கும், வேதனைக்கும் தொடர்ச்சியாக ஆளாக்கி வந்தனர்’ என்றும். ‘குடியிருக்கும் இடத்தையும் இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதால், வேறு வழியின்றி உயிரை விடத் துணிந்தோம்’ என்று கூறினார்.
இந்த குடும்பத்தினரை வெளியேற்றுவதற்கு வீட்டு வசதி சங்கத்துடன் சேர்ந்து தொல்லை தந்த ஆளும் பி.ஜே.பி. கட்சி பிரமுகர்கள், தற்கொலை சாவுகளுக்கு பிறகு முதலை கண்ணீர் விட்டு, மாநகராட்சிக்கு எதிராக கண்டனம் தெரிவித்து பொய் வேடமிட்டு வருகின்றனர். கிரீஷின் மரண வாக்குமூலத்தில் அவரது குடும்பத்தை, பி.ஜே.பி. கவுன்சிலர்கள் ராஜ்பா ஜாலாவும், கமலேஷ் மிரானியும் சோட்டு நகர் கூட்டுறவு வீட்டு வாரிய சங்க உறுப்பினர்களுடன் சேர்ந்து மிரட்டியதாக கூறியுள்ளார்.
தீக்குளிப்புகாங்கிரஸ் கட்சி எம்.பி.யும், தேசிய மனித உரிமை கமிஷன் உறுப்பினருமான ராஜு பர்மர், மான் சிங் குடும்பத்தினருக்கு, நஷ்டஈடு தந்து அனுதாபங்கள் தெரிவிக்க சென்றிருக்கிறார். இறந்துபோன பரத்தின் மூத்த மகள் மது அவர் கொடுக்க வந்த காசோலையை ஏற்க மறுத்து, “எங்களுக்கு முன்பே உதவ ஏன் முன்வரவில்லை?” என்று விரட்டியிருக்கிறார். போலீசையும், மாநகராட்சியையும் பலமுறை அணுகியும் யாரும் உதவவில்லை என்றும், தந்தையும், தாயும், உறவினர்களும் நெருப்பில் எரியும் போதும் அவர்களை காப்பாற்ற ஒருவர் கூட வரவில்லை என்றும் புலம்பி அழுது இருக்கிறாள் அந்தப் பெண்.
‘சோட்டு நகர் கூட்டுறவு குடியிருப்பு சங்கத்தினர், அவர்கள் வீட்டிற்கு வரும் மின்சாரத்தை தடை செய்து, குழந்தைகள் தெரு விளக்கின் ஒளியில் படிக்க வேண்டியது ஏற்பட்டது’ என்றும், ‘தண்ணீர் வருவதை தடுத்து நிறுத்தினர்’ என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். ராம் சிங் குடும்பத்தினர் நியாயம் கிடைக்கும் வரையில் இறந்தவர்களின் உடல்களை வாங்க மறுத்துள்ளனர். அவர்களுக்கு நீதிகிடைக்க உதவுவதாக அதிகாரிகள் வாக்குறுதி வழங்கிய பின்னரே சடலங்களை பெற்று சென்றுள்ளனர்.
வழக்கம் போல போலீஸார் குற்றச்சாட்டுகள் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. குற்றவாளிகளை கைவசம் வைத்துகொண்டே, குடும்பத்தினரை இந்நிலைக்கு ஆளாக்கிய அயோக்கியர்களை பிடித்தே தீருவோம் என்று முழங்கிவருகிறார் ராஜ்கோட் போலீஸ் கமிஷனர் பி. சிங். குடியிருப்பில் வசிக்கும் துஷ்யந்த் தனக், ஹரேஷ் வஜா, மற்றும் ஜெயந்தி டோலாக்கியா ஆகிய மூவரை பெயருக்கு கைது செய்துள்ளனர்.
சோட்டுநகர் போன்ற குடியிருப்புகள் பணம் சேர்க்க முடிகின்ற நடுத்தர வர்க்கத்தினரை தனித் தீவுகளாக வாழ வைப்பதற்காக அமைக்கப்பட்டவை. மான் சிங்கின் மறைவிற்கு பின், அவருடைய செக்யூரிட்டி வேலையை அவர் குடும்பத்தினர் யாரும் செய்யவில்லை எனினும் அவரது குடும்பத்தினர் அந்த பகுதியின் அங்கத்தினராகவே வாழ்ந்து வந்துள்ளனர். பணக்காரர்கள் வாழும் இடத்தில் அவர்கள் குடியிருப்பதை கூட்டுறவு குடியிருப்பு சங்கத்தினாலும், பிற குடியிருப்பவர்களாலும் ஏற்க முடியவில்லை. அவர்களை வெளியேற்றும் நோக்கில் அந்தப் பகுதியில் செல்வாக்கு பெற்ற அரசியல் வாதிகளையும், அதிகாரிகளையும் கொண்டு கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளனர். இறுதியாக சட்டரீதியாக தாக்குதல் நடத்தி வெளியேற்றத்தை நடைமுறைப்படுத்தியுள்ளனர்.
பணம் படைத்தவர்களுக்குத்தான் வாழும் உரிமை என்ற இந்த சமூக அமைப்பில் உழைத்து வாழும் ஏழைகளுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. மோடியின் குஜராத் இதற்கு விதிவிலக்கு அல்ல.
மேலும் படிக்கhttps://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhxAzIGkeKqx4RP0-7i9wF46FdrBGCC5F0CyXLsGpK1X9bcY5d-NqFLnMlbv0c6rKyqaH6mHyM9kgQNsYc4OITJi0GmzmylzspMhy1Sa1J0ROBJMaaAgshBDhJEtXILLeaHAJAjBPa3oVg/s640/120_1519.jpg

வீடு ஏலம் salem s.1523

வியாழன், 23 ஜூலை, 2015

SALEM LIST SLMHSG 95

SALEM IMPORANT

நெல்லையில் கூட்டுறவு வீட்டு வசதி கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

http://www.dinamalar.com/index.asp




திருநெல்வேலி:நெல்லையில் கூட்டுறவு வீட்டு வசதி கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்கள் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கூட்டுறவு வீட்டு வசதி கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி வண்ணார்பேட்டை கூட்டுறவு வீட்டு வசதி துணை பதிவாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
கூட்டுறவு வீட்டு வசதி சங்க கடனால் பாதிக்கப்பட்டவர்கள் நலச்சங்க மாவட்ட தலைவர் கமருதீன் தலைமை வகித்து பேசிய போது, ""கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் 50 ஆயிரம் முதல் 3 லட்சம் ரூபாய் வரை வாங்கிய கடனுக்கு 2 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் திருப்பி செலுத்தியும் தற்போது கடன் நிலுவைத்தொகை வாங்கிய கடனை விட 2 மடங்கு அதிகமாக உள்ளது.
10, 15 ஆண்டுகளுக்கு மேல் அசலை விட 2, 3 மடங்கு பணம் திருப்பி செலுத்தியும் கடன் தீரவில்லை. வட்டி, அபராத வட்டி என பணம் வசூலிக்கப்படுகிறது. கடன் அசல் குறையவில்லை. வீட்டு வசதி சங்கங்களில் கடன் பெற்றவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.
தற்போது தமிழகம் முழுவதும் கடும் வறட்சி நிலவுகிறது. விவசாயம், நெசவுத்தொழில் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. மின்வெட்டால் தொழில்கள் நலிவடைந்துள்ளன. பிழைப்பதற்கு கஷ்டப்படும் நிலையில் சாதாரண மக்களால் வீட்டு வசதி சங்க கடனை திருப்பி செலுத்த இயலாது.
நெல்லை மாவட்டத்தில் ஏராளமானோர் வீட்டு வசதி சங்க கடனால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடனாளிகளின் வீடுகளை ஏலம், ஜப்தி செய்வதாக மிரட்டும் சங்கங்களுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம். கூட்டுறவு வீட்டு வசதி சங்க கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். இல்லையெனில் 3 லட்சம் ரூபாய் வரை அசல் கடன் தொகையை தள்ளுபடி செய்ய வேண்டும்'' என்றார்.
செயலாளர் சுந்தரம், கீழப்பாவூர் காங்., நிர்வாகி சுப்பிரமணியன், கருவந்தா விவசாயிகள் சங்கம் பொன்னுத்துரை, இந்திய கம்யூ., பிரமுகர் ராஜகோபால், சுப்பிரமணியன், சங்கரபாண்டியன், அனந்தப்பன், சமுத்திரம், முருகானந்தம், கல்யாணி உள்ளிட்டோர் பேசின

வீடுகளை ஜப்தி செய்வதை ‌‌த‌மிழக அரசு கைவிட வேண்டும்: ஜெயலலிதா சென்னை, வியாழன், 23 செப்டம்பர் 2010 (13:28 IST)

www.pallivaasal.com/ShowPage.asp?f=102

டுகளை ஜப்தி செய்வதை ‌‌த‌மிழக அரசு கைவிட வேண்டும்: ஜெயலலிதா

சென்னை, வியாழன், 23 செப்டம்பர் 2010 (13:28 IST)
கடன் வாங்கிக் கட்டிய ஏழை, எளிய மக்களின் வீடுகளை ஜப்தி செய்யுமநடவடிக்கையை உடனடியாகக் கைவிட வேண்டும் ன தமிழக அரசை அ.இ.அ.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், தமிழ்நாட்டில் நிலவுமகடுமையான மின்வெட்டு மற்றும் தவறான பொருளாதார கொள்கைகள் காரணமாவேளாண் தொழிலும், நெசவுத் தொழிலும் நலிவடைந்து வருகின்றன.

இதன் காரணமாக, விவசாயிகளும், நெசவுத் தொழிலாளர்களும் கூட்டுறவு வீட்டவசதி சங்கம் மற்றும் நிலவள வங்கிகளின் மூலம் வீடு கட்ட தாங்கள் வாங்கிகடனை திரும்பச் செலுத்த முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

80,000 ரூபாய் முதல் 2,00,000 ரூபாய் வரை வாங்கிய கடனுக்கு, 3,00,000 ரூபாயமுதல் 4,00,000 ரூபாய் வரை திருப்பி செலுத்தியுள்ளதாகவும்; இருப்பினுமதற்போதுள்ள நிலுவைத் தொகை வாங்கிய கடனை விட இரண்டு மடங்கஅதிகரித்து இருப்பதாகவும்; இதற்காக ஜப்தி, ஏலம் போன்ற நடவடிக்கைகளை அரசஎடுத்திருப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது மட்டுமல்லாமல், பணத்தை செலுத்தச் சொல்லி தினம், தினம் தாங்களஅவமானப்படுத்தப்படுவதாகவும், ரவுடிகளால் மிரட்டப்படுவதாகவும், ஏலமஎடுப்பதற்கும், வீட்டு உரிமையாளர்களை வெளி யேற்றுவதற்கும் வெளியூர்களிலஇருந்து ஆட்களை கூட்டுறவு வீட்டு வசதி சங்க அலுவலர்கள் அழைத்தவருவதாகவும் ஏழை, எளிய மக்கள் தெரிவிக்கின்றனர்.

கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் கடன் பெற்றவர்கள் அனைவரும் ஏழை,எளிய விவசாயிகள், நெசவுத்தொழிலாளர்கள் மற்றும் நலிவடைந்த மக்கள். கடனவாங்கி, வீடு கட்டி, வாங்கிய கடனுக்கு மேல் வட்டியும் செலுத்திவிட்டு, அந்வீடும் அவர்கள் கண்ணெதிரே ஏலம் போகக்கூடிய துர்ப் பாக்கிய நிலைமை ஏழை,எளிய மக்களுக்கு இந்த ி.ு.க. ஆட்சியில் ஏற்பட்டு இருக்கிறது.

உண்மையிலேயே கருணாநிதிக்கு ஏழை, எளிய மக்கள் மீது அக்கறை இருந்தஇருக்குமேயானால், ஜப்தி நடவடிக்கையை உடனடியாக நிறுத்த உத்தரவிட்டு,அசலை மட்டும் செலுத்தி, அடமானப் பத்திரங்களை பெறும் வாய்ப்பினஉருவாக்கித் தந்திருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்யாமல், ஜப்திநடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார் கருணாநிதி.

கருணாநிதியின் இது போன்ற மனிதாபிமானமற்ற செயலுக்கு கடும் கண்டனத்தைததெரிவித்துக் கொள்வதோடு, ஜப்தி நடவடிக்கையை உடனடியாகக் கைவிவேண்டும் என்று கேட்டுக்கொள்வதாக ஜெயலலிதா தனது அறிக்கையிலதெரிவித்துள்ளார்.