வியாழன், 23 ஜூலை, 2015

நெல்லையில் கூட்டுறவு வீட்டு வசதி கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

http://www.dinamalar.com/index.asp




திருநெல்வேலி:நெல்லையில் கூட்டுறவு வீட்டு வசதி கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்கள் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கூட்டுறவு வீட்டு வசதி கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி வண்ணார்பேட்டை கூட்டுறவு வீட்டு வசதி துணை பதிவாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
கூட்டுறவு வீட்டு வசதி சங்க கடனால் பாதிக்கப்பட்டவர்கள் நலச்சங்க மாவட்ட தலைவர் கமருதீன் தலைமை வகித்து பேசிய போது, ""கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் 50 ஆயிரம் முதல் 3 லட்சம் ரூபாய் வரை வாங்கிய கடனுக்கு 2 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் திருப்பி செலுத்தியும் தற்போது கடன் நிலுவைத்தொகை வாங்கிய கடனை விட 2 மடங்கு அதிகமாக உள்ளது.
10, 15 ஆண்டுகளுக்கு மேல் அசலை விட 2, 3 மடங்கு பணம் திருப்பி செலுத்தியும் கடன் தீரவில்லை. வட்டி, அபராத வட்டி என பணம் வசூலிக்கப்படுகிறது. கடன் அசல் குறையவில்லை. வீட்டு வசதி சங்கங்களில் கடன் பெற்றவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.
தற்போது தமிழகம் முழுவதும் கடும் வறட்சி நிலவுகிறது. விவசாயம், நெசவுத்தொழில் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. மின்வெட்டால் தொழில்கள் நலிவடைந்துள்ளன. பிழைப்பதற்கு கஷ்டப்படும் நிலையில் சாதாரண மக்களால் வீட்டு வசதி சங்க கடனை திருப்பி செலுத்த இயலாது.
நெல்லை மாவட்டத்தில் ஏராளமானோர் வீட்டு வசதி சங்க கடனால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடனாளிகளின் வீடுகளை ஏலம், ஜப்தி செய்வதாக மிரட்டும் சங்கங்களுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம். கூட்டுறவு வீட்டு வசதி சங்க கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். இல்லையெனில் 3 லட்சம் ரூபாய் வரை அசல் கடன் தொகையை தள்ளுபடி செய்ய வேண்டும்'' என்றார்.
செயலாளர் சுந்தரம், கீழப்பாவூர் காங்., நிர்வாகி சுப்பிரமணியன், கருவந்தா விவசாயிகள் சங்கம் பொன்னுத்துரை, இந்திய கம்யூ., பிரமுகர் ராஜகோபால், சுப்பிரமணியன், சங்கரபாண்டியன், அனந்தப்பன், சமுத்திரம், முருகானந்தம், கல்யாணி உள்ளிட்டோர் பேசின

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக