பின்னணி என்ன? மோகன் பியாரே, வீட்டுவசதி துறை செயலராகவும், சி.எம்.டி.ஏ., துணை தலைவர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வந்தார். இந்த பதவி காலத்தில், விதிமீறல் கட்டடங்களை வரன்முறை செய்யக் கோரும் மனுக்களை ஆய்வு செய்வதற்கான மேல்முறையீட்டு குழு கூட்டங்களில், பெரும்பாலான தனியார் கட்டடங்களை வரன்முறை செய்ய ஒப்புக்கொள்ளாதது, பல்வேறு தரப்பினருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், சி.எம்.டி.ஏ.,வில் நடந்த நிர்வாக குளறுபடிகளை கண்டித்தது, மவுலிவாக்கம் கட்டட விபத்து வழக்கில் இவர் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டிருந்த விவரங்களால், சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது.தற்போதைய இடமாற்றத்தின் பின்னணியில் இக்காரணங்களும் இருக்கலாம் என வீட்டுவசதித் துறை வட்டாரங்களில் பேசப்படுகிறது.http://www.tamilmithran.com/article-source/MjQ0MDc=/தலைமை-செயலர்-உட்பட-12-அதிகாரிகள்-மாற்றம்:-பதவி-ஏற்ற-60-நாட்களுக்குப்பின்-ஓ.பி.எஸ்.,-வேகம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக