திங்கள், 29 ஜூன், 2015

வீட்டைக் கட்டிப் பார்

http://kumarimainthan.blogspot.in/2007/07/blog-post.html

1.7.07

   

வீட்டைக் கட்டிப் பார்

உலகிலுள்ள நாடுகளெல்லாம் எதிர்நோக்கும் ஒரு பெரும் சிக்கல் மக்களுக்குக் குடியிருக்க வீடுகள் கட்டுவதாகும். நம் நாட்டிலும் அச்சிக்கல் உண்டு. இச்சிக்கலைத் தீர்ப்பதாகக் கூறிக்கொண்டு அவ்வப்போது சில திட்டங்களை நடுவண் அரசும் மாநில அரசுகளும் ஊரறியப் பறைசாற்றுவதுண்டு. ஆனால் நடைமுறையில் அரசு செய்யும் செயல்கள் இதற்கு நேர்மாறாக உள்ளன. இச்செயல்கள் நகர ஊரமைப்புத் துறை மூலமாக ஒரு புறமும் கடன் வழங்கும் நிறுவனங்கள் மூலம் இன்னொரு புறமும் நடைபெறுகின்றன.

ஒரு குடிமகன் தனக்கு ஒரு வீடு கட்டுவதற்காக ஒரு வரைபடம் போட்டு அதற்கு உரிய உள்ளூராட்சியிடம் ஒப்புதல் பெறும் நடைமுறை நாளுக்கு நாள் சிக்கலாக்கப்பட்டு வருகிறது. இப்படிச் சிக்கலாக்குவதற்கு உள்ளூர் திட்டக் குழுமம் என்றொரு அமைப்பு பயன்படுகிறது.

ஒப்பேற்கப்பட்ட மனைப்பிரிவுகளுக்குத் தான் கட்டிட வரைபடம் ஒப்பளிக்கப்படும் என்ற கொள்கை அறிவிக்கப்பட்டிருந்தாலும் அவ்வாறு ஒப்பேற்றைப் பெறாத மனைப் பிரிவுகளிலும் வரைபடங்களுக்கு ஒப்பளிக்கப்படுகிறது. இதில் பொதுமக்களிடம் கையூட்டு பெறப்படுகிறது. அதேவேளையில் உள்ளூர் திட்டக் குழுமம் என்ற அமைப்பு ஒரு பகுதியைத் "திட்டப் பகுதி" என்று அறிவித்துவிட்டால் ஒரு கட்டிட மனைக்கு ஒப்புதல் பெறுவதற்கு ஒரு முறை சென்னையிலிருக்கும் நகர ஊரமைப்பு அலுவலருக்கு உள்ளூர் திட்டக் குழுமம் மூலம் மனுச்செய்து உட்பிரிவு ஒப்புதல் பெறவேண்டும். பின்னர் உள்ளூர் திட்டக் குழுமத்திடம் திட்ட இசைவு பெற வேண்டும். மூன்றாவதாக உள்ளூராட்சியிடம் வரைபட உரிமம் பெறவேண்டும்.

இதில் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு மட்டத்திலும் கட்டணங்களும் கையூட்டுகளும் உண்டு. அலைச்சல்களுக்கும் அலைக்கழிப்புகளுக்கும் கணக்கில்லை.

இந்த நிலைமையில் இந்த உள்ளூர் திட்டக் குழுமத்தில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை உள்ளூர் திட்டக் குழுமத்தின் தலைவராக அந்தந்த நகராட்சியின் தலைவரும் உறுப்பினர் - செயலராக நகரமைப்பு அலுவலரும் இருந்து வந்தனர். புது ஏற்பாட்டின்படி உள்ளூர் திட்டக் குழுமத்தின் தலைவராக அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவரும் நெல்லை, சிதம்பரனார், குமரி மாவட்டங்களுக்கு ஒரே உறுப்பினர் செயலாகராத் திருநெல்வேலியிலுள்ள மண்டல நகரமைப்புத் துணை இயக்குநரும் அமர்த்தப்பட்டுள்ளனர். இனி ஒரு வரைபடத்துக்கான திட்ட இசைவு மனுவோ ஒரு மனைப் பிரிவு அல்லது மனை உட்பிரிவு மனுவை நகரமைப்பு இயக்குநருக்கு அனுப்பும் மனுவோ அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தான் கொடுக்கப்பட வேண்டும்.

அந்தந்த மாவட்டத் தலைநகருக்கும் உறுப்பினர் - செயலர் வரும்போதுதான் மனுக்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும். இவ்வாறு ஒவ்வொரு கட்டத்திலும் திருநெல்வேலியிலிருந்து உறுப்பினர் - செயலரின் வருகைக்காக மனுக்களும் மக்களும் காத்திருக்க வேண்டியிருக்கும். மக்களின் நிலைமை எவ்வாறிருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. நாளுக்கு நாள் உயரப் பறந்துகொண்டிருக்கும் விலைவாசியின் முன்னால் இந்த நாள் கடத்தும் நடைமுறையால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புளை நம்மால் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

கட்டட விதிகளில் சூழ்நிலைக்கும் நடைமுறைக்கும் பொருந்தாதவை பல உண்டு. அத்துடன் திடீர் திடீரென்று புதுப்புதுச் சுற்றறிக்கைகளின் மூலம் நடைமுறைக்கு ஒவ்வாத புதுப்புது விதிகளை நகர ஊரமைப்பு இயக்குநர் புகுத்துவார். இந்த விதிகளுக்கு விலக்குகள் அளிப்பது வழக்கமான நடைமுறை. ஆனால் இவ்விலக்குளைப் பெறுவதற்குச் சென்னையிலுள்ள நகரமைப்பு இயக்குநர்(DTP) அலுவலகம் அல்லது தலைமைச் செயலகம் வரை வீடுகட்டுவோர் சென்று அவற்றைத் "தள்ளி" விட வேண்டும் என்பதிலிருந்து இதன் கடுமை புரியும்.

அடுத்த காலங்கடத்தும் இடம் வீடுகட்டக் கடன் வழங்கும் நிதி நிறுவனங்களாகும். வீடுகட்டுவதற்குக் கீழ்க்கண்ட நிதி நிறுவனங்கள் கடன் வழங்குகின்றன.

1. கூட்டுறவு வீடமைப்புச் சங்கங்கள்
2. அரசு அலுவலகங்கள்
3. ஆயுள் உயிர் காப்பீட்டுக் கழகம்
4. வங்கிகள்
5. வீட்டு வளர்ச்சி நிதியளிப்புக் கழகம்(HDFC)
6. மேற்படி கழகத்திடமிருந்து பணம்பெற்றுக் கடன் வழங்கும் சில தனியார் நிறுவனங்கள்
7. மாநில வீட்டுவசதி வாரியம்

இவற்றில் ஒவ்வொன்றாக நாம் பார்ப்போம்.

1. கூட்டுறவு வீடமைப்புச் சங்கங்களில் கடன் மனுச்செய்யும் நடைமுறை எளிது. உள்ளாட்சியால் ஒப்பளிக்கப்பட்ட வீட்டு வரைபட நகல்களும் கடன் தொகையைத் தீர்மானிப்பதற்கேற்ற மதிப்பீடும் தேவை. அடுத்துக் கட்டடம் கட்டப்படவேண்டிய மனை மீது கடன் பெறுபவர்க்கு உள்ள உரிமையை நிலைநாட்டும் ஆவணங்கள் தேவை. இந்த ஆவணங்கள், வரைபடங்கள், மதிப்பீடுகளை ஆய்வு செய்து அச்சங்கத்தின் வழக்கறிஞர் கருத்துரை வழங்குவார். கருத்துரை வழங்கிய பின் கடனுக்கு ஒப்பளிப்பு வழங்கப்படும். ஒப்பளிப்புக்குப் பின்னர் கட்டட மனையையும் கட்டப்படவிருக்கும் கட்டடத்தையும் சங்கத்திற்குக் கடன்பெற விருப்பவர் அடமானம் எழுதிக் கொடுக்க வேண்டும்.

இதுவரை அனைத்தும் எளிதாக முடிந்துவிடும். இனிமேல் தான் சிக்கல். வீடமைப்புக் கூட்டுறவு சங்கங்களுக்கெல்லாம் ஒரு நடுவண் சங்கம் சென்னையில் இருக்கிறது. உள்ளூர்ச் சங்கத்தின் கையிருப்பில் கடன் கொடுக்கத் தேவையான பணம் இருந்தாலும் நடுவண் சங்கம் ஒப்பளித்தால் தான் கடனைக் கொடுக்க முடியும். இந்த நடுவண் சங்கம் எந்த நொடியில் வேண்டுமாயினும் மனுக்கள் வாங்குவதையும் கடன் தவணைகள் வழங்குவதையும் நிறுத்தி உள்ளூர் சங்கங்களுக்கு ஆணையிட முடியும்.

கூட்டுறவு சங்கங்களில் அரசு இயந்திரத்தின் தலையீடு எப்போதுமே உண்டு. நேர்மையாக நடக்க விரும்பும் சங்கங்கள் கூட அரசு அதிகாரிகளின் நெருக்குதல்களினால் ஊழல் புரிய நேர்வதுண்டு.

2. அரசு அலுவலகங்கள் எனும் போது நடுவண், மாநில அரசுகள் வெவ்வேறு நெறிமுறைகைளக் கையாள்கின்றன. நடுவணரசு அலுவலகங்களில் பணிபுரிவோர்க்கு எளிதில் கடன் கிடைத்து விடுகிறது. மனைப்பிரிவு ஒப்பளிக்கப்பட்டதாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் உள்ளூராட்சியிடம் ஒப்பளிப்பு பெற்ற வீட்டு வரைபடம் இருந்தால் போதும் கடன் வழங்கப்பட்டுவிடும். அத்துடன் மனுச் செய்த ஆறு மாதங்களில் கடன் வழங்கப்பட்டுவிடும். நடுவணரசு சார்ந்த பிற நிறுவனங்களிலும் இதுவே நடைமுறை.

ஆனால் மாநில அரசின் கதையே வேறு. வீட்டுமனை நகரமைப்புத் துறையில் ஒப்பளிப்பைப் பெற்ற மனைப்பிரிவில் உள்ளதாயிருக்க வேண்டும். அத்தகைய மனைப்பிரிவில் உள்ளூராட்சியால் ஒப்பளிக்கப்பட்ட வரைபடத்துடன் மனுச் செய்ய வேண்டும். கடன் கொடுப்பது திடீர் திடீரென்று நிறுத்தி வைக்கப்படும். நீண்ட நாட்கள் இவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்ட கடன் வழங்கல் அண்மையில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. ஐந்தாண்டுகளுக்கு முன்பு மனுச் செய்தவர்களுக்கே இப்போது கடன் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. மாநில அரசு சார்ந்த பிற நிறுவனங்களிலும் இது தான் நிலை.

உடனடியாக ஒரு வீடு வேண்டுமென்று விரும்புவோருக்குப் பயனில்லை இதனால். எனவே அவர்கள் வேறு கடன் நிறுவனங்களையே நாடவேண்டி வருகிறது. இருந்தால் இருக்கட்டும், கட்டி வாடகைக்கு விடலாம் என்று கருதுபவர்களுக்கே மாநில அரசின் இந்தக் கடன் கொள்கை உதவும்.

3. மூன்றாவதாக வருவது உயிர்க் காப்பீட்டுக் கழகம். காப்பீட்டாளர்களுக்கு வீடு கட்டும் கடன் வசதி செய்து கொடுக்கிறோம் என்று இக்கழகம் வாக்களிக்கிறது. கடன் தேவைப்படும் தொகைக்குக் காப்பீடு செய்ய வற்புறுத்துகிறது. அத்தொகைக்குக் காப்பீடு செய்து முடித்ததும் அதன் ஆர்வம் மங்கி விடுகிறது. காப்பீட்டுக் கழகத்தில் நடைமுறை கீழ்க்கண்ட வாறாகும்.

முதலில் கடன் தேவைப்படும் தொகைக்குக் காப்பீட்டில் சேர வேண்டும். பின்னர் உள்ளூராட்சியிடம் ஒப்பளிப்புப் பெற்ற வரைபடத்துடனும் மதிப்பீட்டுடனும் மனுச் செய்யவேண்டும். கழகத்தில் பதிவு பெற்ற பொறியாளரின் சான்று பெற வேண்டும். அதன் பின்னர் கழகத்தின் பதிவு பெற்ற வழக்கறிஞரின் கருத்தினைப் பெற வேண்டும். இவ்வளவுக்கும் பிறகு மனு மண்டல அலுவலகம் செல்லும். அங்கும் ஒரு முறை வேறொரு வழக்கறிஞரின் கருத்து பெறப்படும். அவர் குறைபாடுகள் எவற்றையேனும் சுட்டிக்காட்டினால் மீண்டும் ஒரு முறை திரும்பவரும். அதனைச் சரிசெய்ய வேண்டும்.

மீள அனுப்பப்பட்ட மனு மீண்டும் சில சிக்கலான அலுவலக நடைமுறைகளுக்காகப் பலமுறை மண்டல அலுவலகத்துக்கும் உள்ளூர் அலுவலகத்துக்கும் போய்த் திரும்பும். இதற்குள் பெரும்பாலான கடன் கேட்போர் தம் சொந்தப் பணத்திலும் அங்கிங்கு புரட்டியும் வீட்டைக் கட்டி முடித்து விடுவார்கள். அல்லாதவர் பாடு திண்டாட்டம் தான்! இதனால் தவறாமல் ஆதாயம் அடைபவர்கள் முகவர்கள் தாம்!

ஒப்பளிக்கப்பட்ட பின்பும் சிக்கல் தீர்ந்துவிடாது. மதிப்பீட்டுத் தொகையின் ஒரு பகுதிதான் கடனாகக் கொடுக்கப்படும். மீதித் தொகையின் விகிதத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் கடன் வேண்டுபவர் முதலில் கட்டட வேலை செய்து அதனைக் கழகப் பொறியாளர் ஏற்கச்செய்ய வேண்டும். இதற்காக அப்பொறியாளருக்கு ஒவ்வொரு முறையும் கழகம் கணிசமான தொகையைக் கடன் வேண்டுவோர் மீது சுமத்தும். எனவே விவரம் அறிந்தோர் உயிர் காப்பீட்டுக் கழகம் பக்கம் தலைவைத்துப் படுப்பதில்லை.

4. வங்கிகள் கடன் கொடுப்பதாகக் கொள்கை அளவில் கூறிக்கொள்ளும். ஆனால் அக்கடன்கள் மூலம் பயன்பெறுவோர் வங்கி ஊழியர்களும் அவர்கள் பரிந்துரைக்கும் அவர்களது உறவினர்கள் அல்லது நண்பர்களும் தான். வீட்டுக் கடன் என்பதில் மட்டுமல்ல அரசுடைமை வங்கிகளிலிருந்து‌ கிடைக்கும் நன்மைகளில் பெரும்பாலானவற்றில் வங்கி ஊழியர்களுக்கும் அவர்களின் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தான் உரிமை உண்டு என்பது நடை முறை உண்மை.

5. எச்.டி.எஃப்.சி. எனும் நிதியளிப்புக் கழகத்தின் நடைமுறை எளிதானது. உள்ளூராட்சியிடம் ஒப்புதல் பெறப்பட்ட வரைபடம், மதிப்பீடு, மனையின் உரிமை பற்றிய ஆவணங்கள், வருமானத்தைப் பற்றிய சம்பளச் சான்றிதழ் அல்லது வருமானவரி ஆண்டறிக்கை இவற்றை இந்நிறுவனத்திடம் ஒப்படைத்துக் கடன் தவணைகளைத் திருப்பிச் செலுத்துவதற்கு வருமானம் போதுமா போன்ற வழிமுறைகளை அது நிறைவு செய்தால் உடனடியாகக் கடன் வழங்கப்படுகிறது.

மாவட்டத் தலைநகரங்களுக்கு மாதம் ஒரு நாள் வருகைதரும் கழகத்தின் அலுவலர்கள் மூலமாகவே கடன்தொகை வழங்கப்படுகிறது. ஏற்கனவே இன்னொரு கடன் நிறுவனத்திடம் கடன் நிலுவை இருந்தாலும் அதைச் செலுத்திப் போக அக்கடன் வேட்பாளரால் மாதந்தோறும் கட்ட இயலக்கூடிய தொகைக்கு இக்கழகம் கடன் வழங்குகிறது. இது இக்கழகம் மட்டுமே காட்டும் சலுகையாகும். இக்கழகத்தின் நடைமுறையைக் கூர்ந்து பார்த்தால் வீடு கட்டுதல் என்பதை விட வட்டிக்குக் கடன் கொடுத்துத் திரும்பப் பெறல் என்பதிலேயே அது குறியாயிருப்பது புலப்படும்.

6. இக்கழகத்திடம் கடன்பெற்றுக் கழகத்தில் அதே எளிய நடை முறைகளுடன் அதே வட்டிக்குக் கடன் வழங்கும் நிறுவனங்களும் உள்ளன.

7. இறுதியில் வருவது மாநில வீட்டுவசதி வாரியம். இந்நிறுவனம் அரசு ஊழியர்களுக்கு வீடுகட்டும் நோக்கத்தில் முதலில் தொடங்கப்பட்டது. பின்னர் தனியாருக்கு வீடுகட்டவும் மனைகளை அமைத்துச் சாலை, குடிதண்ணீர், வடிகால் வசதி, புதை சாக்கடை முதலிய வசதிகளோடும் மக்களுக்கு அளித்தது.

அண்மைக் காலத்தில் இதன் நடவடிக்கைகள் மிகவும் விரிவடைந்துள்ளன. எல்லா நகரங்ளைச் சுற்றியும் வீடமைப்பதற்கென்று தனியார் நிலங்கள் பெருமளவில் கையகப்படுத்தப்படுகின்றன. இந்த நடைமுறையில் இக்கையகப்படுத்தலிலிருந்து தப்புவதற்கென்று பெருந்தொகை, கைக்கூலியாகவும் கைமாறுகிறது. அத்துடன் வணிக நோக்கில் செயற்படும் இக்கழகத்திற்கு அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தைப் பயன்படுத்துவது முறைகேடு என்ற குரலும் புறக்கணிக்கப்படுகிறது. இவ்வாறு உருவாக்கப்பட்ட மனை அல்லது வீடு முதலில் ஒரு குறிப்பிட்ட தொகை செலுத்திப் பின்னர் மாதத் தவணைகளில் மீதித் தொகையைச் செலுத்துதல் என்ற அடிப்படையில் பொது மக்களுக்குக் குலுக்கல் முறையில் ஒதுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதில் ஒரு விந்தை என்னவென்றால் சொத்தை ஒப்படைக்கும் ஆவணத்திலுள்ள ஒரு கட்டுப்பாடு கட்டடங்களில் கட்டுமானம் தரமாயில்லை என்று மறுப்புரை கூற அவற்றைப் பெறுவோருக்கு உரிமை இல்லை என்பது. இது எப்படி இருக்கு?

அன்றியும் தாழ்த்தப்பட்டவர், பழங்குடியினர் என்ற ஒதுக்கீடுகளைப் பயன்படுத்திப் போலிச் சான்றிதழ்களைப் வைத்து வீடு ஒதுக்கீடு பெற்று விடுகிறார்கள். ஒரு குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் தனித்தனி மனுக்கள் அளித்துக் குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் வீடு கிடைத்து விடுகிறது. ஒவ்வொருவருக்கும் பத்து வீடுகள் வரை கிடைக்கிறது. உண்மையான ஏழைகளுக்கும் வீடு தேவைப்படுவோருக்கும் வீடுகள் கிடைப்பது அரிது.

மேற்கூறிய கடன் நிறுவனங்களில் செயற்பாட்டைத் தொகுத்து ஆய்ந்தால் பொதுமக்கள் கடன் பெற்று வீடு கட்டவோ கட்டிய வீட்டைத் தவணை முறையில் பெறவோ வேண்டுமென்றால் ஒன்று எச்.டி.எஃப்.சி.யை நாட வேண்டும் அல்லது வீட்டுவசதி வாரியத்தை நாட வேண்டும் என்ற நிலைக்கு அவர்கள் நெருக்கப்படுகிறார்கள் என்பது பெறப்படும். அது மட்டுமல்ல! இரண்டு மூன்றாண்டுகளுக்கு முன் ஏறக்குறைய 85 பங்கு உலகவங்கி மூலதனத்தில் எச்.டி.எஃப்.சி. தொடங்கப்பட்டதென்பதும் மாநில வீட்டுவசதி வாரியத்தில் இப்போது பெருமளவு உலகவங்கி முதலீடு உள்ளதென்பதையும் கவனத்தில் கொண்டால் நாம் பெறும் விடை யாது? இவ்வாறு உலக வங்கியின் முதலீடு இவ்விரு நிறுவனங்களிலும் நுழைந்த பின்னர்தான் வீடுகட்டும் கடனில் திருப்பிச் செலுத்தும் தொகைக்கு வருமானவரி கணிப்பில் கழிவுண்டு என்ற விதி சேர்க்கப்பட்டது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அத்துடன் வேளாண் நிலங்களில் வீடுகள் கட்டக் கூடாது என்று இரண்டாண்டுகளுக்கு முன் பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு அரசு, அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு விலக்கு உண்டு என்பதையும் கட்டட விதிகளில் சிக்கலானவற்றுக்கு அரசே விலக்கு அளித்து விடுகிறது என்பதையும் கவனத்தில் கொண்டால் இந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புரிமை விளங்கும்.

மறைமுகமாகவும் நேரடியாகவும் பூட்டப்பட்டுள்ள விலங்குளையும் அகற்றினால் இந்தியாவிலுள்ள பொதுமக்களாலும் எச்.டி.எஃப்.சி., வீட்டுவசதி வாரியம் போன்ற அரசு நிறுவனங்களின் செயற்பாட்டை அவற்றைவிடவும் சிறப்பாகவும் நல்ல தரத்துடனும் செய்ய முடியும். அதன் மூலம் இவ்வரசு நிறுவனங்களைப் போல் பல நூறு மடங்கு இந்திய மக்களுக்கு வீடுகட்டும் பணியில் சிறப்புடனும் வீறுடனும் ஈடுபட்டு நிறைவேற்ற முடியும்.

ஆனால் விலங்குகள் ஒடியும் நன்னாள் எந்நாளோ?

(21.10. 93 தினமணியில் சில மாற்றங்களுடன் வெளியிடப்பட்டது.)

 குமரிமைந்தன் படைப்புகள்

வீட்டுவசதிக்கான நிதியுதவித் திட்டங்கள் - நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் குறித்த தொகுப்புச் சுற்றறிக்கை

வீட்டுவசதிக்கான நிதியுதவித் திட்டங்கள் - நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் குறித்த தொகுப்புச் சுற்றறிக்கை
RBI/2009-2010/77
UBD.PCB-MC.No.2/09.22.010/2009-10
ஜூலை 1, 2009
அனைத்து தொடக்கநிலை (நகர்ப்புற) கூட்டுறவு வங்கிகளின் முதன்மை நிர்வாக அதிகாரிகளுக்கும்
அன்புடையீர்,
வீட்டுவசதிக்கான நிதியுதவித் திட்டங்கள் - நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் குறித்த தொகுப்புச் சுற்றறிக்கை
மேற்குறிப்பிட்ட  விஷயங்குறித்த தொகுப்புச் சுற்றறிக்கை எண் UBD. BPD (PCB)MC.No.2/09.22.010/2008-2009  ஜூலை 1, 2008  தேதியிட்டதைப் பார்வையிடுக. (ரிசர்வ் வங்கி இணையதளம் www.rbi.org.in ஐப் பார்க்கலாம்). ஜுன் 30, 2009 நாள் வரை வெளியான அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் இணைக்கப்பட்டுள்ள தொகுப்பு இந்த தொகுப்புச் சுற்றறிக்கையில் அடங்கியுள்ளன.
2. கிடைக்கப்பெற்றமைக்கான ஒப்புதலை உரிய ரிசர்வ் வங்கியின் பிராந்தியக் கிளைக்கு அனுப்பவும்
தங்கள் உண்மையுள்ள
A.K. ஹுண்ட்
தலைமைப் பொதுமேலாளர் (பொறுப்பு)
தொகுப்புச் சுற்றறிக்கை
வீட்டுவசதித் திட்டங்களுக்கான நிதியுதவி
பொருளடக்கம்
  1. பொதுவானவை     
  2. கடன்வாங்கத் தகுதியுள்ளோர்   
  3.  கடனுக்கான தகுதியான திட்டங்கள்        
  4. வீட்டுவசதிக் கடனுக்கான சட்டவிதிகளும் நிபந்தனைகளும்              
4.1. அதிகபட்ச கடன்தொகை மற்றும் கடனிழப்பீட்டுத் தொகை    
4.2. வட்டி
4.3. தண்டனை வட்டி விதித்தல்      
4.4. கடனுக்கான அடமான சொத்து
4.5. கடனின் கால அளவு
4.6. படிப்படியான தவணைத் தொகை
4.7. வீட்டுவசதி நிதியுதவிக்கான மொத்த வரம்பு     
  1. கூடுதல்/இணை கூட்டான நிதியுதவி
  2.  வீட்டுவசதி வாரியங்களுக்கு கடனளித்தல்
  3. வீடுகட்டுவோர்/ஒப்பந்ததாரருக்கு கடன்வசதிகள்   
  4. முன்னுரிமைப்பிரிவிலுள்ள வீட்டுவசதிக் கடன்கள் 
  1. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்   
  1. தேசியவீடுகட்டும் விதிமுறைகள்    
பின்னிணைப்பு....1
பின்னிணைப்பு.........
தொகுப்புச் சுற்றறிக்கை
வீட்டுவசதித் திட்டங்களுக்கான நிதியுதவி
  1. பொதுவானவை
    1. வீட்டுவசதிக்கான நிதியுதவி அளிப்பதில் தொடக்கநிலை (நகர்ப்புற) கூட்டுறவு வங்கிகளின் பங்களிப்பு என்பது அவ்வப்போது திருத்தியமைக்கப்பட்டு வருகிறது.  இந்த வங்கிகள் தங்களின் பெருவாரியான இணைப்புத் தொகுப்பினால், நிதிசார்ந்த துறையில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாகத்  திகழ்வதோடு,  வீட்டுவசதித் துறைக்கு, கடனளிப்பதிலும் முக்கியப் பங்காற்ற வேண்டும். சில குறிப்பிட்ட வகையினருக்கு, குறிப்பிட்ட வரம்பு வரை வீட்டுவசதிக்காக கடனளிப்பது என்பது முன்னுரிமைக் கடன் பிரிவில் சேர்வதாகக் கருதப்படுகிறது.  முன்னுரிமை பிரிவினை சார்ந்தோருக்கு தொடக்கநிலை நகர்ப்புறக் கூட்டுறவு வங்கிகளின் கடனளிப்பு என்பது வங்கித்துறையிலுள்ள சமுதாய ரீதியான கோட்பாடுகளுக்கு இயைபுடைய ஒன்றாகக் கருதப்படுகிறது.
    2. ஆகையால், தொடக்கநிலை நகர்ப்புறக் கூட்டுறவு வங்கிகள் இதில் ஊக்கத்தோடு தத்தம் பங்களிப்பை அளித்திடல் வேண்டும்.  ஆகவே அதற்கு ஏதுவாக கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு தங்களின் நிதி ஆதாரங்களிலிருந்தே, ஒரு குறிப்பிட்ட வரம்பு வரை வீட்டுவசதி திட்டங்களுக்கு கடனுதவி அளித்திட, அதுவும் குறிப்பாக நலிவுற்ற பிரிவினருக்கு அளிக்க அனுமதி அளித்திட வேண்டும்.
    3. நல்ல வருமானம் பெறும் வழிமுறையாதலால், பெரிய வங்கிகள் தங்களின் உபரி இருப்பு நிதிகளை வீட்டுவசதிக்காக பெரிய அளவில் கடனுதவி அளித்திட முன்வரவேண்டும்.
    4. வங்கிகள் வீட்டு வசதிக்கடனுதவி அளிக்கும் வேளையில், அமைப்பின் பதிவாளரிடமும் சிறப்பு அனுமதி ஒவ்வொரு முறையும் பெற நேரிடுவதால், வங்கிகள் இதன்பொருட்டு பின்பற்ற வேண்டிய கட்டளைகள், கருத்துகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அவற்றை பூர்த்தி செய்து, பொதுவான அனுமதியைப் பெற்றுக் கொள்ளலாம்.
2. கடன்பெறத் தகுதியுடையவர்கள்
2.1 நகர கூட்டுறவு வங்கிகள் கீழ்க்கண்ட வகையான கடனாளிகளுக்கு கடன் அளிக்கலாம்.

  1. தனிநபர்கள் மற்றும் கூட்டுறவு வீட்டுவசதி அங்கத்தினர்கள்
  2. நலிவுற்ற பிரிவினருக்கான வீட்டுவசதிதிட்டங்களை அமல்படுத்தும் வீட்டுவசதி வாரியங்கள், குறைந்த நடுத்தர வருவாய் வகுப்பினர் மற்றும் நடுத்தர வருவாய் வகுப்பினருக்கான வீட்டுவசதித்திட்டங்கள்.
  3. வீட்டை விரிவாக்கக் கட்டுதல், மேம்படுத்துதல், முக்கிய மராமத்துப்பணிகள் ஆகியவற்றை மேற்கொள்ளும் வீட்டு உரிமையாளர்கள்.
3. தகுதிபெற்ற வீட்டுவசதித்திட்டங்கள்
3.1. பின்வரும் வீட்டுவசதித் திட்டங்களுக்கான முன்னர் குறிப்பிடப்பட்ட பிரிவினர் வங்கிக்கடன் பெற தகுதியுடையவர்கள் ஆவார்கள்.
  1. வீடு மற்றும் குடியிருப்பினைக் கட்டும் அல்லது நேரடியாக வாங்கும் தனிநபர்கள்
  2. வீடு/குடியிருப்பினை மராமத்து, மாற்றங்கள் மற்றும் விரிவாக்கம் செய்யும் தனிநபர் உரிமையாளர்கள்
  3. வீடுகள் மற்றும் தங்கும் விடுதிகள் கட்டுமானப்பணிகள் இவற்றை மேற்கொள்ளும் பட்டியலிடப்பட்ட சாதியினர்/பழங்குடி இனத்தவர்
  4. குடிசைமாற்று திட்டங்களில்

    a.  அரசின் உத்தரவாதத்தின் பேரில் நேரிடையாகக் குடிசைவாழ் மக்களுக்கும்
     b.   மறைமுகமாக இத்தகு பணிக்கென அமைக்கப்பட்ட
            வாரியங்களுக்கும் கடனுதவி அளிக்கலாம்.
  5. கல்வி, சுகாதாரம், சமூகநலம், கலை இலக்கியம் சார்ந்த நிறுவனங்கள்/அமைப்புகள், குடியிருப்புகள் அமைத்திட அல்லது அவற்றை மேம்படுத்த மேற்கொள்ளும் வீட்டுவசதித் திட்டங்கள்
  6.  குடியிருப்புகள் சார்ந்த இடங்களில், திட்டத்தின் ஒரு அங்கமாக, குடியிருப்போரின் தினசரித் தேவைகளைப் பூர்த்தி செய்திட கடைகள் மற்றும் சந்தைகள் அமைத்திட திட்டம்.
4. வீட்டுவசதிக் கடன்களுக்கான கருத்துக்கள் மற்றும் கட்டளைகள்
தகுதியான வீட்டுவசதிக் கட்டமைப்புகளுக்கு தகுதியான நபர்களுக்கு நகர கூட்டுறவு வங்கிகள் கடனுதவி அளிக்கும்போது பின்வரும் கருத்துக்களையும் கட்டளைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
4.1. அதிகபட்ச கடன் தொகை மற்றும் கடனிழப்பீட்டு ஈடு தொகை (Margin)
  1. கடனாளிகளின் திருப்பித்தரும் தகுதியைப் பொறுத்து நகர கூட்டுறவு வங்கிகள் தங்களின் வணிகநிலைப்பாட்டு யூகங்களைப் பிரயோகித்து, விவேகமான வணிக நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு, வங்கியின் நிர்வாகிகள் குழுமத்தின் ஒப்புதலோடு, கடனாளிகளை அடையாளங்கண்டு தன்னிச்சையாக, வீட்டுவசதிக் கடன்களை வழங்கலாம்.
  2. ஒரு குடியிருப்பு உரிமையாளருக்கு வங்கிகள் அதிகபட்சம் ரூ;25 லட்சம் வரை கடனுதவி அளிக்கலாம். எனினும், இரண்டாம் அடுக்கு நகர கூட்டுறவு வங்கிகள் ( முதல் அடுக்கு நகர கூட்டுறவு வங்கிகள் அல்லாத, அனைத்து இதர கூட்டுறவு வங்கிகளும்).  ஒரு குடியிருப்பிற்கு தற்போதுள்ள விவேக வரையறைக்குட்பட்டு அதிகபட்சமாக ரூபாய் 50 லட்சம் வரை தனிப்பட்ட வீட்டுவசதி கடன் வழங்கலாம்.
  3.  வங்கிகள் தனது மொத்த மூலதன நிதியத்தில் 15%ற்கு மிகாமல் ஒரு தனிநபருக்கும், கூட்டான கடனாளிகளுக்கு குழுவாக மொத்தம் 40%ற்கு மிகாமலும் கடனுதவி வழங்கலாம்.  மொத்த மூலதன நிதியத்தை கணக்கிடும்போது முதல் அடுக்கு மற்றும் இரண்டாம் அடுக்கு மூலதனத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

    * கீழ்க்கண்ட முறையில் முதல் அடுக்கு நகர கூட்டுறவு வங்கிகள் வகைப்படுத்தப் பட்டுள்ளன:
      1. தனியொரு மாவட்டத்தில் செயல்படும் 100 கோடிக்கும் கீழ் வைப்புத் தொகைகள் உள்ள வங்கிகள்
      2. ரூபாய் 100 கோடிக்கும் கீழ் வைப்புகளுடன் ஒன்றுக்குமேற்பட்ட மாவட்டங்களில் செயல்படும் வங்கிகள் முதல் அடுக்கு வங்கிகள் ஆகும்.  அருகருகே உள்ள மாவட்டங்களில்  அக்கிளைகள்  இருக்கவேண்டும்.  மற்றும் ஒரு மாவட்டத்தில் உள்ள கிளைகளில் மொத்த வைப்புகள் மற்றும் முன்தொகைகளில் 95 சதவீதமாவது வைப்புகள் மற்றும் முன்தொகைகள் ஒரு மாவட்டத்திற்கு உடையதாக இருக்கவேண்டும்.
      3. ரூபாய் 100 கோடிக்கும் குறைவாக வைப்புகள் உள்ள வங்கிகளின் கிளைகள் தொடக்கத்தில் ஒரு தனி மாவட்டத்திலும் ஆனால் காலப்போக்கில் மாவட்ட மறுசீரமைப்பின் காரணமாக பலமாவட்ட வங்கிகளாக உருவெடுத்தது.
    மேலே குறிப்பிட்ட வைப்புகள் மற்றும் முன்தொகைகள் முந்தைய நிதி ஆண்டின் மார்ச் 31 ஆம் தேதிக்கானது என்று கருதப்படுகிறது.
4.2. வட்டிவிகிதம்
      இடர்வரவு விகிதம், குடியிருப்பின் அளவு, மற்ற காரணிகள் இவற்றைக் கருத்தில் கொண்டு, வங்கிகள் தமது நிர்வாகக் குழுமத்தின் ஒப்புதலோடு வீட்டுவசதிக் கடன்களின் வட்டி விகிதத்தை வங்கிகள் நிர்ணயிக்கலாம்.
4.3. அபராத வட்டி விகிதம் விதித்தல்
      வங்கிகள் தத்தம் நிர்வாகக் குழுமத்தின் ஒப்புதலோடு ஒளிவுமறைவில்லாத தன்மையுடைய கொள்கை முறைமையை வகுத்திடலாம். கடனைத் திருப்பியளிக்கும் தவணைகளில் தாமதம், நிதிஅறிக்கைகள் அளிக்கத் தவறுதல், ஆகிய நேரங்களில் விதிக்கப்படும் அபராத வட்டிவிகிதம் குறித்த கொள்கையை வங்கிகள் வகுத்துக் கொள்ளலாம்.  ஒளிமறைவில்லாதத் தன்மை, நேர்மையான அணுகுமுறை, கடன் பராமரிப்பில் லாபம், வாடிக்கையாளரின் நியாயமான பிரச்சனைகளைப் புரிந்துகொள்ளுதல் ஆகிய முக்கியமான அனைவரும் ஒப்புக்கொள்ள கூடிய கொள்கைகளைக் கொண்டவையாக வங்கியின் முறைமைகள் அமைந்திட வேண்டும்.
4.4. அடமானம் /பிணையம்
  1. நகர கூட்டுறவு வங்கிகள் வீட்டுக் கடனுதவிக்கு பின்வரும் வகையில் அடமானம் பெறலாம்.
    1. சொத்தின் அடமானம்
    2. அரசின் உத்தரவாதம்
    3. அல்லது மேற்குறிப்பிட்ட இரண்டும் சேர்ந்து
  2. மேற்குறிப்பிட்டது வசதியாக இல்லாத நேரங்களில் அந்த மதிப்புடைய ஆயுள் காப்பீட்டுப் பத்திரங்கள், அரசு உத்தரவாதப் பத்திரங்கள், பங்குப் பத்திரங்கள்/கடன் பத்திரங்கள், தங்க ஆபரணங்கள் ஆகியவற்றை வங்கிகள் அடமானமாக ஏற்றுக்கொள்ளலாம்.
4.5.கடனின் கால அளவு
  1. வீட்டுவசதிக் கடன்களின் கால அளவு “தள்ளுபடிச் சலுகை”, “திருப்பியளிப்பதில் விடுமுறை” என்று பல்வகை சலுகைக் கால அளவையும் சேர்த்து அதிகபட்சம் 15 ஆண்டுகளாக இருக்கலாம்.
  2. கடன் தள்ளுபடி அல்லது திருப்பியளிப்பதில் விடுமுறைச் சலுகை
    1. கடனாளியின் விருப்பம் போல்
    2. ட்டுமானப்பணி முடியும் கால அளவு வரையோ, கடனின் முதல் தவணை அளிக்கப்பட்ட நாளிலிருந்து 18 மாத காலம் இவற்றில் எது முன்கூட்டிய கால அளவோ அதுவரை இச்சலுகை அளிக்கப்படலாம்.
4.6. படிப்படியாக அமைக்கப்பட்ட கால அளவுத் தவணைகள்
  1. கடனாளியின் திருப்பித்தரும் தகுதியைக் கருத்தில் கொண்டு சாத்தியக் கூறுகளையும் ஆலோசித்து நியாயமான  முறையில் கடன்தவணைகள் அமைக்கப்பட வேண்டும்.
  2.  வீட்டுவசதிக் கடன் பெறுபவருக்கு கட்டுபடியாகும் வகையில் வங்கிகள் படிப்படியாகக் கணக்கிட்டு கடன் தவணைகளை அமைத்திட வேண்டும்.  அப்போது வருங்காலத்தில் கடனாளியின் வருவாய்த் தகுதியையும் கருத்தில் எடுத்துக் கொள்ளலாம்.  படிப்படியாகக் கணக்கிடும் முறையில், முதல் சில  ஆண்டுத் தவணைகளில் குறைந்த அளவில் தொகையையும் பின்வரும் ஆண்டுகளில் எதிர்நோக்கும் வருவாய் அதிகரிப்போடு ஒத்திசையும் வண்ணம் அதிகத் தொகையுள்ள தவணைகளையும் அமைத்திடலாம்.
4.7. வீட்டுவசதிக் கடனுக்கான மொத்த வரையறை
4.7.1 தமது மொத்த வைப்புநிதிகளில் 15%ஐ நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் வீட்டுவசதிக் கடன் அளிக்கவும் மூலதனக் கடன் அளிக்கவும் பயன்படுத்தலாம்.
4.7.2. தேசிய வீட்டுவசதி வங்கியிடமிருந்தோ அல்லது மற்ற உயர் நிதி நிறுவனங்களிடமிருந்தோ பெற்ற நிதியளவிற்கேற்ப கடன் உச்சவரம்பை உயர்த்தி கொண்டு வங்கிகள் வீட்டுவசதிக் கடன் அளிக்கலாம்.
5. கூடுதல் துணை கடன்வசதிகள்
    1. கடனாளிகளின் தகுதியைக் கருத்தில் கொண்டு முன்னரே கடன் பெற்று கட்டப்பட்ட அடுக்குமாடி வீடுகள் மற்றும் வீடுகளின் மாற்றியமைப்பு விரிவாக்கம், சீரமைப்பு பணிகளுக்காக கூடுதல்  கடன்வசதி அளிக்கலாம்.
    2. சில தனிநபர்கள் வேறுசில நிதி ஆதாரங்கள் மூலம் கடனுதவி பெற்று வீடு கட்டியிருந்தால்/வாங்கியிருந்தால் அதற்காகக் கூடுதல் கடனுதவி தேவைப்பட்டால் இணைப்பிணையமாக அந்த குடியிருப்பைக் கைக்கொண்டு அல்லது இரண்டாவது அடமானமாக அந்த குடியிருப்பைக் கைக்கொண்டு அல்லது வேறொரு அடமானப் பொருளை வைத்துக் கொண்டு வங்கிகள் கடனாளிகளின் நிலைக்கேற்ப திருப்பித் தரும் தகுதிக்கேற்ப கடன் தரலாம்.
    3. வங்கிகள் தேவைக்கேற்ற கடனுதவியாக கிராமப்புறம் மற்றும் பகுதி நகர்ப்புறங்களில் ரூ. 1 லட்சம் வரையும், நகர்ப்புறங்களில் ரூ.2 லட்சம் வரையும் மராமத்து விரிவாக்கம், சீரமைப்புப் பணிகளுக்காக, குடியிருப்புகளின் சொந்தக்காரர்களுக்கு அவற்றில் சொந்தக்காரரே வசித்தாலோ அல்லது வாடகைக்கு விட்டிருந்தாலோ ஏற்புடைய அடமானத்தின்பேரில் கடன் தரமுடியும்.  மராமத்து மற்றும் சீரமைப்புப் பணிகளுக்காக ஆகும் செலவுகள், கூலி மற்றும் இதர செலவுகள் பற்றி தகுதியான பொறியாளர்கள் மற்றும் கட்டிடக் கலைஞர்களின் சான்றிதழ் பெற்று அவை சரியானவை என்று உறுதிப்படுத்திக் கொண்டு கடன்களை வழங்கலாம்.
    4. கடன் ஈட்டுக்காப்புறுதி, வட்டிவிகிதம், கடன் திருப்பியளிக்கும் காலம் இவை குறித்த கருத்துக்கள் மற்றும் கட்டளைகள், கூடுதல்/துணைக்கடன்கள் அளிக்கும்போதும் பின்பற்றப்படும்.  
6. வீட்டுவசதி வாரியங்களுக்குக் கடன்6.1 நகர கூட்டுறவு வங்கிகள் தத்தம் மாநிலங்களில் இயங்கும் வீட்டுவசதி வாரியங்களுக்கு கடன் வழங்கலாம்.  அப்போது அத்தகைய கடன்களுக்கான வட்டிவிகிதத்தை வங்கிகள் தம்மிச்சைப்படி விதித்திடலாம்.
6.2 வீட்டுவசதி வாரியங்களுக்குக் கடன் வழங்கும்போது அவை பயன்பாட்டாளர்களிடமிருந்து கடன்வசூலிப்பதில், காட்டும் செயல் திறமையைக் கருத்தில் கொள்ள வேண்டும் அதோடு கூடவே அவர்கள் சரியான நேரத்தில் தவறாமல் கடனைத் திருப்பியளிப்பதை வீட்டுவசதி வாரியங்கள் உறுதி செய்திடல் வேண்டும் என்பதை வற்புறுத்திட வேண்டும்.
7. கட்டிடக்கலைஞர்கள்/ஒப்பந்தக்காரர்களுக்கு கடன் வசதிகள்7.1 கட்டிடம் கட்டுபவர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் தங்களின் பணிக்காக பெரும்பணம் தேவைப்படுவதால் பயனாளிகளிடமிருந்தே ஓரளவு பணத்தை முன்பணமாகப் பெற்று தங்களின் பணியைத் தொடங்குவார்கள். ஆகவே அவர்களுக்கு வங்கியின் நிதியுதவி பெரும்பாலும் தேவைப்படுவதில்லை.  இத்தகையோருக்கு தொடக்க நிலைக் கூட்டுறவு வங்கிகள் கடனளிப்பது இரட்டிப்பு கடனுதவியாக அமைந்துவிடும்.  ஆகவே வங்கிகள் இத்தகையோருக்கு கடனளிப்பதை இயல்பாகத் தவிர்க்க வேண்டும்.
7.2. சிற்சில சமயங்களில் ஒப்பந்தக்காரர்கள் முன்பணம் ஏதும் பெறாமல் தாமாகவே சில சிறிய கட்டிட வேலைகளை மேற்கொள்ளும்போது அவர்களுக்கு வங்கிகள் கடனுதவி அளிக்கலாம். கட்டிடப் பொருட்களின் அடமானத்தின்பேரில், வங்கியின் துணை விதிகளுக்கு உட்பட்டும் அவ்வப்போது ரிசர்வ் வங்கி வழங்கும் கட்டளைகள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு ஒப்பவும் இந்த கடனுதவியை அளிக்கலாம்.
7.3.  வங்கிகள் முதலில் கடன்விண்ணப்பங்களை முழுவதுமாக அலசி ஆராய்ந்து பார்க்க வேண்டும். அந்த விண்ணப்பதாரின் நோக்கத்தின் நேர்மை, தேவைப்படும் கடனுதவியின் அளவு, அவரின் கடன் பெறக் கூடிய தகுதி, திருப்பியளிக்கும் திறன் ஆகியவற்றை வங்கிகள் கவனிக்கவேண்டும். வழக்கமாகக் கடைப்பிடிக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவ்வப்போது கடனாளியின் இருப்பு அறிக்கைகள், ஆய்வுகள், கணக்கிலிருந்து பணமெடுக்க வரையறுக்கப்பட்ட அதிகார முறைமைகள், இருப்பில் 40% முதல் 50% வரை பிணைய ஈட்டுத் தொகை ஆகியவற்றை கவனிக்க வேண்டும்.  கணக்கிலிருந்து பணமெடுக்கும் அதிகாரத்தை வரையறுக்க கட்டிடப்பணிக்கு உபயோகப் படுத்தப்பட்ட கட்டிடப்பொருட்கள் இருப்புக்கணக்கு அறிக்கையில் சேர்க்கப்படவில்லை என்பதை வங்கிகள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
7.4. நிலத்தை மதிப்பிடுதல்: கட்டிடம் கட்டுபவர்கள்/ஒப்பந்ததாரர்கள் ஆகியோருக்கு நிதி அளிக்கும்பொழுது சில வங்கிகள் பாதுகாப்பு நோக்கத்தில் நிலத்தின் மீது எழுப்பப்படும் கட்டிடத்தின் மதிப்பை மற்றும் செலவுகளை கழித்து நிலத்தை மதிப்பீடு செய்கின்றன. இது வழக்கமாக கடைபிடிக்கும் நடைமுறைகளோடு ஒத்து போகவில்லை. இது தொடர்பாக, தெளிவுபடுத்தப்படுவது என்னவென்றால், நகர கூட்டுறவு வங்கிகள் நிதி அடிப்படையில் அல்லது நிதி அடிப்படையல்லாத வசதிகளை  கட்டிடம் கட்டுபவர்கள்/ஒப்பந்ததாரர்கள் வீட்டுவசதி திட்டத்திற்காக நிலம் வாங்குவதற்கு அளிக்கக்கூடாது. மேலும் எங்கேனும் நிலம் இணைபிணையாக ஒப்புக்கொள்ளப்படும்பொழுது நிலத்தின் மதிப்பீடு நடப்பு சந்தை விலைக்கு நிகராக இருக்கவேண்டும்.
7.5. எங்கெல்லாம் தேவையோ அங்கெல்லாம் வங்கிகள் இணைப்பிணைப் பொருட்களைக் கைக்கொள்ளலாம்.  கட்டிடப்பணி வளர வளர, ஒப்பந்தக்காரர்கள் பணத்தைப்பெற்று அதைக் கடன் கணக்கை குறைக்கவும் பயன்படுத்திக் கொள்ளலாம். பெரும்பாலும் வங்கிகள் இணைப்பிணையம் கிடைக்காதபோது மும்முனைப் பரிவர்த்தனை உடன்படிக்கைகளை கடனாளி மற்றும் நுகர்வோருடன் அமைத்துக் கொள்ளலாம்.
7.6 இவ்வாறு அளிக்கப்படும் நிதியுதவிகள் வீட்டுவசதிக் கடன்களாகக் கருதப்பட மாட்டாது.
8. முன்னுரிமைப் பிரிவில் வீட்டுவசதிக்கடன்
8.1. பின்வரும் வகையிலமைந்த வீட்டுவசதி கடன்கள் முன்னுரிமைப் பிரிவுக் கடன்களாகக் கருதப்படலாம்.
  1. ஒரு குடும்பத்திற்கு ஒரு வீடுகட்ட/வாங்க ஒரு தனிநபருக்கு ரூ.20 லட்சம் வரை கடன்கள் (வங்கிகள் தங்களது சொந்த ஊழியர்களுக்கு வழங்கும் கடன்கள் நீங்கலாக) இந்த இடத்தில் குடும்பம் என்பது அங்கத்தினரின் கணவன்/மனைவி அவர்களது குழந்தைகள் அந்த அங்கத்தினரை சார்ந்திருக்கும் அவர்களது பெற்றோர், சகோதர சகோதரிகள் ஆகியோர். ஆனால் சட்டத்தால் பிரிக்கப்பட்ட கணவன்/மனைவி இடம்பெற முடியாது.
  2. பழுதுபார்த்தல், பராமரிப்பு, விரிவாக்கம், மாற்றம் ஆகியவற்றிற்காக கிராமப்புற மற்றும் பகுதிநகர்ப்புறங்களில் வீட்டுவசதிக்கடன் ரூ.1 லடசம் வரையிலும், நகர்ப்புறங்களில் ரூ.2 லட்சம் வரையிலும் முன்னுரிமை கடனாகக் கருதப்படும்
  3. அரசு சார்ந்த முகமைகளுக்கு பின்வரும் திட்டங்களில் நிதியுதவி அளித்தல்
  4. ஆதிவாசியினர் மற்றும் பழங்குடியினருக்குப் பயன்படும் வகையில் மேற்கொள்ளப்படும் வீட்டுவசதிதிட்டங்கள் அல்லது குடிசை மற்றும் சேரிப்பகுதிகளை மாற்றியமைத்தல் அப்பகுதி வாழ் மக்களுக்கு புனரமைப்பு தரும் பணிகளில் ஈடுபடுதல் ஒரு வீட்டிற்கு ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும்
  5. தேசிய வீட்டுவசதி வங்கியின் அங்கீகாரம் பெற்ற அரசு சாரா முகமை குடிசை மற்றும் சேரிப்புறப்பகுதிப் புனரமைப்புப் பணிகளுக்கு வழங்கும் அங்கீகரிக்கப்பட்ட நிதியுதவிக்கான மறுநிதியுதவி ஒரு வீடு கட்டுவதற்கு/மறுசீரமைப்பிற்கு ரூ.5 லட்சம் உச்சவரம்பு வரையுள்ள கடனுதவிகள் வழங்கப்படும்.
8.2. தேசிய வீட்டுவசதி வங்கி மற்றும் நகர்ப்புற வீட்டுவசதி வாரியம் இவை வெளியிடும் பங்குப்பத்திரங்களில் ஏப்ரல் 1, 2007 அன்றோ அல்லது அதன் பின்னரோ செய்யப்படும் முதலீடுகள் முன்னுரிமைத்துறை கடனுதவியாக வகைப்படுத்தமுடியாது.
9. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
9.1 ஒரே வீட்டுக்கான பத்திரங்களின் பல்வேறு நகல்களைத் தயாரித்து அவற்றைக்காட்டி பல்வேறு வங்கிகளில் அடமானம் வைத்து கடன் பெற்ற மோசடி வழக்குகள் பல ரிசர்வ் வங்கியின் கவனத்திற்கு வந்துள்ளன.  அதிக அளவு கடனுதவி பெற வழிசெய்யும் வகையில் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களின் பணியாளர்கள் போலியான வருமானச்சான்றிதழ்களைத் தயாரித்து அவற்றின் அடிப்படையில் உயர் கடனுதவி பெற்றவர்களும் உண்டு.  சொத்துமதிப்பினைக் கணக்கிடும்போதும் போலியாக அதிகத் தொகையைக் காட்டி, பிணை ஈட்டுத்தொகை கட்டுவதைத் தவிர்த்திடுவோரும் உண்டு.

இத்தகு மோசடிகள் நடைபெற வங்கி அதிகாரிகளின் மெத்தனமான போக்கும் ஒரு காரணமாகும்.  வங்கி அதிகாரிகள் விதிமுறைகளை அனுசரித்து, சமர்ப்பிக்கப்படும் ஆவணங்களின் உண்மைத் தன்மையை வங்கியின் வழக்கறிஞர்கள் அல்லது சட்ட ஆலோசர்களின் துணையோடு பகுத்தாய்ந்திடாமல் கடன் வழங்குதல் கூடாது.  பல்வேறு ஆவணங்களை வங்கிகள் ஏற்றுக் கொள்ளும்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
9.2 அங்கீகாரமில்லாத முறைகேடான கட்டுமானப்பணிகள், பொது நிலத்தை அத்துமீறி அபகரித்து செயல்படுதல் ஆகியவற்றிற்கு கடன் தரும் பணம் பயன்படுத்தப்படவில்லை என்பதை வங்கிகள் உறுதிசெய்து கொள்ள வேண்டும்.  இதன்பொருட்டு, இணைப்பு – 1ல் குறிப்பிடப்பட்டுள்ள செயல்முறைகள் சரியாகப் பின்பற்றப் பட்டுள்ளனவா என்பதை வங்கிகள் கண்காணிக்க வேண்டும்10. தேசிய கட்டுமானப் பணி நெறிமுறைகள்
இந்தியத் தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் முழுமையான “தேசிய கட்டுமானப் பணிக்கான நெறிமுறை 2005” என்ற கொள்கையை அறிவித்தது.  நாடெங்கிலும் உள்ள கட்டுமானப் பணிகளில் பின்பற்றவேண்டிய வழிகாட்டுதல்களை பரிந்துரைத்தது.  பாதுகாப்பான சிறந்த கட்டுமானப் பணிகளை வளர்த்திடத் தேவையான முக்கிய அம்சங்கள் அனைத்தும் இதில் அளிக்கப்பட்டன.  நிர்வாக அமைப்பு சார்ந்த விதிமுறைகள், ஒழுங்கான கட்டுமானப் பணி வளர்ச்சிக்கான விதிகள், பொதுவான கட்டிட அமைப்பு முறைமைகள், தீவிபத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் கட்டுமானப் பணிகளில் பயன்படும் மூலப்பொருட்களுக்கான தரக்கட்டுப்பாட்டு விதிமுறைகள், கட்டுமான வரைபட அமைப்புகள், கட்டுமானப் பணி (பாதுகாப்புடன் கூடிய) குழாய் பொருந்தும் அமைப்புகள், மராமத்து ஆகிய அனைத்து வகை சார்ந்த வழிகாட்டுதல்களும் இந்த நெறிமுறைக் கொள்கையைக் கடைப்பிடிப்பதன் மூலமாக கட்டிடங்களின் பாதுகாப்பு, குறிப்பாக இயற்கை சீற்றங்களின் பாதிப்பிலிருந்து பாதுகாப்பு ஆகியவை கிடைக்கும்.  தமது கடன்கொள்கைகளில் வங்கியின் நிர்வாகக் குழுமம் இத்தகு நெறிமுறைகளைச் சேர்த்துக் கொள்ளலாம்.  தேசிய கட்டுமானப் பணிசார்ந்த நெறிமுறை குறித்த விவரமான பல தகவல்களை இந்தியத் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் இணையதளத்தில் காணலாம். (www.bis.org.in)
இணைப்பு – 1
அங்கீகரிக்கப்பட்ட கட்டிடத்திற்கு கடன் வேண்டப்படுகிறது என்பதை உறுதி செய்து கொள்வதற்கான நடைமுறை தில்லி உயர்நீதி மன்றத்தின் வழிகாட்டுதல்
A. கட்டிடப்பணிக்கான வீட்டுவசதிக் கடன்
  1. வீட்டுமனை அல்லது நிலம் வைத்திருப்பவர், வீடு கட்டுவதற்காக நிதியுதவி வேண்டி வங்கியையோ இதர நிதி நிறுவனங்களையோ அணுகினால் மனை/நிலம் அவர் பெயரில் உள்ளதா? அந்த நபர் கட்டவிருக்கும் கட்டிடத்திற்காக அங்கீகரிக்கப்பட்ட கட்டிட திட்ட வரைப்படத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதா என்று ஆராய்ந்து பெற்றுக் கொண்டு, பின்னர் கடன் வழங்கிட வேண்டும்.
  2. கடனுக்காக விண்ணப்பிக்கும் நபரிடமிருந்து வங்கி ஒரு உறுதிச் சான்றிதழை தேவைப்படும் படிவத்தில் பெற வேண்டும். கட்டிடத்தை  அங்கீகரிக்கப்பட்ட திட்டவரைப்படத்தின்படி, விதிமீறல்கள் ஏதுமின்றி முடித்திட அந்த நபர் உறுதிமொழி அளித்திட வேண்டும்.  கட்டிடம் முடிந்ததும் 3 மாதங்களுக்குள் கட்டிடப்பணி முற்றுப்பெற்ற சான்றிதழை அளித்திட உறுதியேற்க வேண்டும்.  தவறினால் முழுக் கடன் தொகையை வட்டி மற்ற செலவினங்கள், வங்கிக் கட்டணங்களோடு சேர்த்து வங்கிக்கு திருப்பித் தந்திட உறுதி அளித்திட வேண்டும்
  3.  வங்கியே கட்டிடக்கலைஞர் ஒருவரை நியமித்து, கட்டிட வரைபடத் திட்டத்தின்படியே கட்டப்பட்டுள்ளது என்பதை அவர் உறுதிப்படுத்த வேண்டும்.  அதே போன்று கட்டுமானப்பணி முற்றுப் பெற்றுவிட்டதை உறுதிப்படுத்தி அதற்கான சான்றிதழை உரிய அதிகாரியிடமிருந்து பெற்று அளித்துள்ளார் என்பதை அந்த வங்கியின் நியமிக்கப்பட்ட கட்டிடக்கலைஞர் உறுதிப்படுத்த வேண்டும்.
B. கட்டப்பட்ட கட்டிடங்களை நேரடியாக வாங்க வீட்டுவசதிக் கடன்
  1. கட்டப்பட்ட வீடு/குடியிருப்பு இவற்றிற்காகக் கடன் வாங்க ஒருவர் வங்கியை அணுகினால் அவருக்கு ஒரு நிபந்தனையை வங்கி விதிக்க வேண்டும். அதன்படி அவர் ஒரு உறுதிச் சான்றிதழையும் கட்டளைப்படிவத்தையும் பூர்த்தி செய்து தரவேண்டும்.  அதன்படி அவருடைய வீடு/குடியிருப்பு அங்கீகரிக்கப்பட்ட வரைப்படத் திட்டப்படியும் விதிமுறைகளின்படியும் கட்டப்பட்டுள்ளது என்றும் அவ்வாறு கட்டிமுடிக்கப்பட்டவற்றிற்கு முற்றுபெற்ற சான்றிதழ் அங்கீகரிக்கப்பட்ட படிவத்தில் வழங்கப்படும் என்றும் அவர் உறுதி மொழி கூறவேண்டும்.
  2. வீட்டுவசதிக் கடன் வழங்கப்படும் முன்னர், விண்ணப்பத்தாரரின் கட்டிடம் விதிமுறைகளின்படியே கட்டப்பட்டுள்ளது என்பதை வங்கியின் கட்டிடக்கலைஞர் உறுதி செய்திட வேண்டும்.
C. அங்கீகரிக்கப்படாத குடியிருப்புகள் அங்கீகாரம் பெறும் வரை அதற்கான வளர்ச்சிநிதிக் கட்டணம் செலுத்தப்படும் வரை அத்தகைய குடியிருப்புகளுக்கு வங்கிகள் கடனுதவி அளிக்கக் கூடாது.
D. குடியிருப்புக்காகக் கட்டப்பட்ட ஒரு கட்டிடத்தை வணிகத்திற்காகப் பயன்படுத்தும் நோக்கத்தில் ஒருவர் அவ்வாறே பயன்படுத்த, உறுதி மொழியும் அளித்தால், அதற்காகக் கடன் விண்ணப்பித்தால், வங்கி அத்தகு நோக்கங்களுக்காக வீட்டுவசதிக் கடன் அளிக்கக் கூடாது.
E.  மேற்கண்ட வழிகாட்டிகள் விவசாய நிலத்தில் கட்டப்பட்ட பண்ணை வீடுகளுக்கு பொருந்தாது.  ஏனெனில் இந்த விவசாய நிலங்கள் கிராமப் பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சி மன்றங்களின் எல்லைக்கு வெளியே உள்ளதாலும், இந்த நிர்வாகங்கள் வரைவு திட்டத்திற்கு அனுமதி அளிப்பதில்லை.  அதுமட்டுமின்றி விவசாய நிலங்களில் விவசாயிகளால் கட்டப்படும் பண்ணைவீடுகளுக்கு நிறைவு பெற்றமைக்கான சான்றிதழ்களும் அளிக்கப்படுவதில்லை. இத்தகைய அனைத்து விஷயங்களுக்கும் அந்தந்த உள்ளூர் விதிகள் பொருந்தும்.

பிற்சேர்க்கை
வீட்டுவசதிக்கான நிதியுதவித் திட்டங்கள் குறித்த தொகுப்புச் சுற்றறிக்கை
தொகுப்புச்சுற்றறிக்கையில் அடங்கியுள்ள சுற்றறிக்கையின் பட்டியல்
வ. எண்
சுற்றறிக்கையின் எண்கள்
தேதி
விவரங்கள்
  1.  
UBD.PCB.Cir.No.30/
09.09.001/2008-09
08.12.2008
வீட்டுவசதிக் கடன்கள் – டில்லி உயர்நீதி மன்றத் தீர்ப்பு (கல்யாண் சன்ஸ்தா நலச் சங்கம் இந்திய அரசை எதிர்த்து போட்ட வழக்கு) வழிக்காட்டுதல்களை செயல்படுத்துதல்
  1.  
UBD.UCB.Cir.No.42/
09.09.001/2008-09
15.05.2008
தனிநபருக்கான வீட்டுவசதிகடன் வரம்பு திருத்தம் – ஆண்டுக்கொள்கை
  1.  
UBD.CO.BPD.No.33/
13.05.000/2007-08
29.02.2008
கட்டிடக் கலைஞர்கள்/ஒப்பந்தக்காரர்களுக்கு கடன் வசதிகள்
  1.  
UBD.PCB.Cir.No.40/
13.05.000/2006-07
04.05.2007
2007-08ஆம் ஆண்டிற்கான ஆண்டுக் கொள்கை அறிவிப்பு – குடியிருப்புகளுக்கான வீட்டுவசதிக் கடன்கள் – இடர்வரவு மதிப்பீட்டு அளவையைக் குறைத்தல்
  1.  
UBD.PCB.Cir.No.20/
09.09.001/2006-07
22.11.2006
வீட்டுவசதிக் கடன்கள் – டில்லி உயர்நீதி மன்றத் தீர்ப்பு (கல்யாண் சன்ஸ்தா நலச் சங்கம் இந்திய அரசை எதிர்த்து போட்ட வழக்கு) வழிக்காட்டுதல்களை செயல்படுத்துதல்
  1.  
UBD.PCB.Cir.No.58/
09.09.01/2005-06
19.06.2006
தேசிய கட்டிட நெறிமுறைகளை பின்பற்றுதல் – கடன் வழங்கும் நிறுவனங்கள் பின்பற்றவேண்டிய குறிப்புகள்
  1.  
UBD.PCB.Cir.No.55/
09.11.600/2005-06
01.06.2006
2006-07 ஆம் ஆண்டிற்கான ஆண்டுக் கொள்கை அறிவிப்பு –வணிக நிலச் சொத்துக்களில் இடர்வரவு மதிப்பீட்டு அளவையைக் குறைத்தல்
  1.  
UBD.PCB.Cir.No.8/
09.11.600/2005-06
09.08.2005
வீட்டுவசதிக் கடன்கள் மற்றும் வணிக நிலச் சொத்துக்களின் மீதான கடன்களின் நேர்முகப் படுநிலை மற்றும் போதுமான மூலதன நிறைவு ஆகியவை குறித்த விவேகமான நடைமுறைகள்
  1.  
UBD.BPD(PCB).Cir.No.29/09.09.01/2004-05
14.12.2004
முன்னுரிமைப்பிரிவுக்கான கடன்கள் – நகர்புற கூட்டுறவு வங்கிகள் வழங்கும் வீட்டுவசதிக் கடன்களுக்கான உச்சவரம்பை உயர்த்துதல்
  1.  
UBD.PCB.Cir.No.30/
09.22.01/2003-04
16.01.2004
போலி சொத்துரிமை ஆவணங்கள் மற்றும் போலி சம்பளச் சான்றிதழ்களை அளித்து வீட்டுவசதிக் கடன்ககளை பெறுவதில் மோசடி
  1.  
UBD.BPD.No.45/ 09.09.01/2002-03
14.05.2003
2003-04 ஆம் ஆண்டிற்கான கடன்கொள்கை - முன்னுரிமைப்பிரிவுக்கான கடன்கள்
  1.  
UBD.BPD.PCB.No.31/09.09.01/2002-03
30.12.2002
முன்னுரிமைப்பிரிவுக்கான கடன்கள்
  1.  
UBD.No.Plan.Cir.RCS.2 /09.22.01/1998-99
15.03.1999
வீட்டுவசதித்திட்டங்களுக்கான நிதியுதவி – தொடக்க நிலை நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள்
  1.  
UBD.No.Plan./RO.49 /09.22.01/1997-98
17.06.1998
வீட்டுவசதித்திட்டங்களுக்கான நிதியுதவி – தொடக்க நிலை நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள்
  1.  
UBD.No.Plan.Cir.RCS.9 /09.22.01/1995-96
01.09.1995
வீட்டுவசதித்திட்டங்களுக்கான நிதியுதவி – தொடக்க நிலை நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள்
  1.  
UBD.No.Plan.Cir.RCS.8 /09.22.01/1994-95
11.01.1995
வீட்டுவசதித்திட்டங்களுக்கான நிதியுதவி – தொடக்க நிலை நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள்
  1.  
UBD.No.P&O.10/UB-31/ 1991-92
26.03.1992
வீட்டுவசதித்திட்டங்களுக்கான நிதியுதவி – தொடக்க நிலை நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள்
  1.  
UBD.No.P&O.108/UB-31/ 1988-89
05.04.1989
வீட்டுவசதித்திட்டங்களுக்கான நிதியுதவி – தொடக்க நிலை நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள்
  1.  
UBD.DC1/R.1-1987-88
03.07.1987
கடன்களின் மீது உச்சவரம்பு
  1.  
UBD.No.(DC)2/R.1-
1987-88
03.07.1997
கடன்களின் மீது உச்சவரம்பு
  1.  
DBOD.UBD.P&O.161/UB 31-1983-84
02.09.1983
நகர்புற கூட்டுறவு வங்கிகள் அளிக்கும் வீட்டுவசதித்திட்டங்களுக்கான நிதியுதவி
  1.  
DBOD.UBD.P&O.229/UB 31-1982-83
05.11.1982
வீட்டுவசதித்திட்டங்களுக்கு கூட்டுறவு வங்கிகள் அளிக்கும் நிதியுதவி
  1.  
DBOD.UBD.P&O.230/UB 31-1982-83
05.11.1982
பொருளாதார ரீதியாக நலிவுற்ற பிரிவினருக்கான வீட்டுவசதித்திட்டங்களுக்கு கூட்டுறவு வங்கியின் நிதியுதவி
  1.  
ACD.Plan.(SZ)401/PR.338 -1981-82
17.08.1981
வீட்டுவசதித்திட்டங்களுக்கு கூட்டுறவு வங்கியின் நிதியுதவி –
  1.  
ACD.Plan.1502/PR.338 1976-77
11.10.1976
பொருளாதார ரீதியாக நலிவுற்ற பிரிவினருக்கான வீட்டுவசதித்திட்டங்களுக்கு கூட்டுறவு வங்கியின் நிதியுதவி
  1.  
ACD.Plan. (781)/PR.338 1976-77
24.08.1976
பொருளாதார ரீதியாக நலிவுற்ற பிரிவினருக்கான வீட்டுவசதித்திட்டங்களுக்கு கூட்டுறவு வங்கியின் நிதியுதவி
தொகுப்புச் சுற்றறிக்கையில் ஒருங்கிணைக்கப்பட்ட வீட்டுவசதிக்கான நிதியுதவி குறித்த அறிவுறுத்தல்கள் தொடர்புடைய இதர சுற்றறிக்கைகளின் பட்டியல்
வ. எண்
சுற்றறிக்கையின் எண்கள்
தேதி
பொருள்
1
UBD.CO.L.S.Cir.No.66/07.01.000/2008-09
06.05.2009
2 009-10 ஆண்டிற்கான ஆண்டு கொள்கை அறிவிப்பு -    செயலாக்க பரப்பெல்லையை விரிவுபடுத்துதல் – அதிகாரமளித்தல்            
2
UBD.UCB.Cir.No.11/ 09.09.01/2007-08
30.08.2007
முன்னுரிமைப்பிரிவுக்கான கடன்களுக்கான திருத்தியமைக்கப்பட்ட வழிகாட்டுதல்கள்
3
UBD.PCB.BPD.1/ 09.09.001/2006-07
11.07.2006
முன்னுரிமைப்பிரிவுக்கான கடன்கள் – NHB/HUDCO வெளியிடும் சிறப்பு பத்திரங்களில் முதலீடுகள்
4
UBD.PCB.Cir.No.16/
09.09.001/2006-07
17.10.2006
முன்னுரிமைப்பிரிவுக் கடன்கள் - வீட்டுவசதிக் கடன்கள் –உச்சவரம்பை உயர்த்துதல்
5
UBD.DS.Cir.No.44/
13.05.000/2004-05
15.04.2005
கடனில் உச்ச வரம்பு – கடன் படுநிலையின் வரம்பு
6.
UBD.DS.Cir.No.31/
13.05.000/1999-2000
01.04.2000
கடனில் உச்ச வரம்பு – கடன் படுநிலையின் வரம்பு
7.
UBD.Plan.PCB.7 /09.09.01/1999-2000
22.12.1999
முன்னுரிமைப்பிரிவுக் கடன்கள் - வீட்டுவசதிக் கடன்கள்
8.
UBD.Plan.PCB.24 /09.09.01/1997-1998
01.12.1997
தொடக்க நிலை நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் அளிக்கும் முன்னுரிமைப்பிரிவுக் கடன்கள்
9.
UBD.DS.PCB.Cir.No.39/
13.05.00/1995-96
16.01.1996
தொடக்க நிலை நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் அளிக்கும் கடனில் உச்ச வரம்பு
10
UBD.Plan.PCB.6 /09.09.01/1994-1995
22.07.1994
தொடக்க நிலை நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் அளிக்கும் முன்னுரிமைப்பிரிவுக் கடன்கள்
11
UBD.Plan.68 /09.09.01/1993-1994
09.05.1994
தொடக்க நிலை நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் அளிக்கும் முன்னுரிமைப்பிரிவுக் கடன்கள்
12
UBD.DC.536/R.1
1984-85
16.10.1984
கடன்களின் மீது உச்சவரம்பு

வயிற்றை கட்டி, வாயை கட்டி ஒரு தம்மாத்தூண்டு வீட்டை வாங்கி விட வேண்டும்

http://azhiyasudargal.blogspot.com/

போடுவது கோட் சூட்... இருப்பதோ ஏசி அறை... எடுப்பதோ லஞ்சப் பிச்சை...

0 கருத்துகள்
வயிற்றை கட்டி, வாயை கட்டி ஒரு தம்மாத்தூண்டு வீட்டை வாங்கி விட வேண்டும் என்று வாழ்நாள் கனவை நிறைவேற்ற துடியாய் துடித்து, வங்கிப் படியேறினால், மாத சம்பளம் வாங்கும் அந்த மகாஜனத்தின் நம்பிக்கை எல்லாம் ஒரே நொடியில் பொய்த்துப் போய், அந்த சிறிய குடும்பத்தின் தலைவனின் குட்டிக் கோட்டை நொறுங்கியும் விடுகிறது.
காரணம், சொந்த வீடு வாங்கும் அளவுக்கு அவனுக்கு எந்த கதியும் இல்லை என்பதை, ஒரு வங்கி அதிகாரி நிர்ணயித்து விடுகிறார். அவர்கள் வைத்தது தான் சட்டம். வீடு  வாங்குவதாகட்டும், கல்விக்கடன் தருவதாகட்டும், ஏன், அவசர தேவைக்காக பத்தாயிரம் ரூபாய் பர்சனல் லோனாகட்டும், நடுத்தர வர்tamil-daily-news-1284க்கத்துக்கு வங்கி அதிகாரிகளிடம் இருந்து வரும் பதில் என்ன தெரியுமா? ‘உங்களுக்கு நிரந்தர வேலை இல்லையே... வங்கியில் போடப்படும் சம்பளம் போதுமானதாக இல்லையே...’ என்பது தான்.
வங்கியில் சேமிப்பு கணக்கு துவங்கி, அதில் மாதாமாதம் சம்பளப்பணத்தில் குறிப்பிட்ட சதவீதம் சேமித்து, பத்தாம் தேதிக்குள், வாடகை, கரன்ட் பில், மளிகை பில், பேப்பர் பில், கடன் இருந்தால் அதன் தவணைத் தொகை என்றெல்லாம் கணக்கிட்டு, போதாக்குறைக்கு பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு என பிக்சட் டெபாசிட்டிலும் சொற்ப பணத்தை முதலீடு செய்து விட்டு, பத்தாம் தேததிக்கு பின் ‘அப்பாடா...’ என்று திருப்தி அடைவது தான் மாத சம்பளம் வாங்கும், நடுத் தர வர்க்கத்தினரின் வாழ்க்கை.
ஆனால், இவர்களுக்கு கடனுதவி திட்டங்களை அரசு போட்டாலும், அதிகாரிகள் அதில் மண்ணைப் போட்டு விடுவது தான் இதுவரை நடந்து வருகிறது. அப்பாவி மக்களின் வயிற்றில் அடிக்கும் இந்த வங்கி அதிகாரிகள் இன்னொரு பக்கம், ‘வலுத்தவர்களுக்கு’ வாரியிறைக்கும் பணியையும் செய்கின்றனர். சாலையில் லாரியை கைகாட்டி, ஐந்து ரூபாய் வாங்கும் டிராபிக் போலீசை தான் உங்களுக்கு தெரியும். கோட் சூட் போட்டுக்கொண்டு ஏசி அறைக்குள் லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்குவது பற்றி இதுவரை யாரும் வெளிக்கொண்டு வரவும் இல்லை; வெளியே தெரியவும் இல்லை.
அரசு வீட்டுக்கடன் அமைப்பின் உயர் அதிகாரி சிக்கியது தான் பலருக்கும் பெரும் அதிர்ச்சி. அதோடு, அரிச்சந்திர வங்கி அதிகாரிகளின் தோலும் உரிக்கப்பட்டு விட்டது சி.பி.ஐ.யால்.  இவர்கள் செய்தது தான் என்ன என்று இன்னமும் கூட இந்த மகாஜனங்களுக்கு புரியவில்லை. அந்த அளவுக்கு  கேடித்தனத்தையும் கோட்டு சூட்டால் மூடி செய்துள்ளனர் இந்த ‘ஹானஸ்ட்’ பிரபுக்கள்.  குறிப்பிட்ட நிதி ஆலோசனை நிறுவனத்தின் மூலம், நிதி நிறுவனங்களுக்கும், பில்டர்களுக்கும் மறைமுகமாக பல கோடிகளை கடனாக அள்ளித் தந்துள்ளனர். இதற்கு இவர்கள் பெற்றுக் கொண்டது, இந்த நிறுவனங்கள் போட்ட  பல லட்சம் லஞ்சப்பிச்சையும், கேளிக்கை சமாச்சாரங்களும்.
1. அர்ஷத் மேத்தா & 4,000 கோடி ரூபாய்
2. கேத்தன் பரேக் & 2,000 கோடி ரூபாய்
3. ஐபிஎல் மோசடி & 1,200 கோடி ரூபாய்
4. ஹவாலா மோசடி& 500 கோடி ரூபாய்
5. லாலு கால்நடை தீவன ஊழல் & 900 கோடி ரூபாய்
6. சத்யம் ஊழல் & 14,000 கோடி ரூபாய்
7. டெல்ஜி முத்திரைத்தாள் மோசடி & 20,000 கோடி ரூபாய்
8. காமன்வெல்த் போட்டி ஊழல் & 70,000 கோடி ரூபாய்
இந்த ஊழல்கள் தான் இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் என்று சான்றளிக்கப்பட்டுள்ளது. இதில், இப்போது வீட்டுவசதி லஞ்ச ஊழலும் சேர்ந்து விட்டது.
நாயருக்கு குர்கானில் பிளாட்
சிபிஐ பிடியில் சிக்கிய எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராமச்சந்திரன் நாயர் குர்கான், புறநகர் பகுதியில் பிளாட் ஒன்று வாங்கியுள்ளார். பிளாட் விலையில் குறிப்பிட்ட தொகையை தள்ளுபடி செய்வதற்கும், தேவையான பணத்தையும் மணி மேட்டர்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராஜேஷ் சர்மாவிடம் பெற்றுள்ளார். கடந்த ஆண்டு நவம்பரில் ணீ45 லட்சம் லஞ்சமாக நாயர் பெற்றுள்ளார். இதற்காக, டி.பி. ரியாலிட்டி,
பாஷ்மினா லிமிடெட், மந்திரி ரியாலிட்டி, சிங்ருன் லிமிடெட், என்டர்டெய்ன்மென்ட் வேர்ல்டு, இந்தூர் சிட்டி டெசரர்ஸ் ஆகிய நிறுவனங்கள் கோடிக்கணக்கில் கடன் பெற உதவியுள்ளார். சிபிஐயின் இந்த குற்றச்சாட்டை நாயரின் வக்கீல் மறுத்துள்ளார். நாயர் நிறுவனத்தின் தலைவர் தான், கடன் தொகையை அவர் நேரடியாக அனுமதிப்பது இல்லை. ஒரு கமிட்டிதான் கடன் தொகையை அனுமதிக்கிறது என்று கூறியுள்ளார்.
மும்பையில் உள்ள பாங்க் ஆப் இந்தியாவின் பொதுமேலாளர் பி.என்.தயாள் ணீ25 லட்சத்தை ராஜேஷிடம் இருந்து லஞ்சமாக பெற்றுள்ளார். இதற்காக அஷாபுரா மினிசெம் நிறுவனம் பெரும் தொகையை கடன் பெற உதவியுள்ளார். பிஜிஆரின் ணீ200 கோடி மின் திட்டத்துக்கும் ஓபிஜி குழுமத்தின் ணீ300 கோடி திட்டத்துக்கும் உதவி செய்வதாக ராஜேஷிடம் தயாள் வாக்குறுதி அளித்திருந்தார் என்றும் சிபிஐ குற்றம் சுமத்தியுள்ளது.
இதேபோல், எல்.ஐ.சி.யின் செயலாளர் (முதலீடு) கே.சோப்ரா ணீ16 லட்சம் லஞ்சம் பெற்றுள்ளார். அடானி, ஜே.பி. ஹைட்ரோ, ஜே.எஸ்.டபிள்யு. பவர், ராலிங்கர், பான்டலூன், அடலைட், எம்டெக் ஆகிய நிறுவனங்களுடன் எல்.ஐ.சி.யின் தொடர்பு, செயல்பாடுகள் குறித்த தகவல்களை மணி மேட்டர்ஸ் நிறுவனத்துக்கு சோப்ரா தந்துள்ளார்.
லாவாசா நிறுவனம் கடன் பெற சாதகமாக செயல்பட மும்பை சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவின் இயக்குனர் மணிந்தர்சிங் ஜோகர் (சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்) ணீ30 லட்சம் லஞ்சம் வாங்கியுள்ளார். இதேபோல், புதுடெல்லியில் உள்ள பஞ்சாப் நேஷனல் பாங்க்கின் துணை பொது மேலாளர் வெங்கோபா குஜ்ஜால் ணீ20 லட்சம் லஞ்சம் பெற்றுக் கொண்டு ராஜேஷின் வாடிக்கையாளர் ஒருவருக்கு ணீ50 கோடி கடன் பெற உதவி செய்துள்ளார். இவ்வாறு மும்பை சிபிஐ நீதிமன்றத்தில் சிபிஐயின் வக்கீல் இஜாஸ் கான் தெரிவித்துள்ளார்.
யார் இந்த மணி மேட்டர்ஸ்?
Ôமணி மேட்டர்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட்Õ என்ற நிதி ஆலோசனை நிறுவனம் மும்பையில் செயல்படுகிறது. இந்த நிறுவனம், எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் மற்றும் பிற அரசுடமை வங்கிகளின் உயர் அதிகாரிகளுக்கு லட்சக் கணக்கில் லஞ்சம் கொடுத்து பெரிய பெரிய கட்டுமான நிறுவனங்களுக்கு கோடிக் கணக்கில் கடன் வாங்கிக் கொடுக்கும் Ôஇடைத்தரகர் சேவைÕ செய்து வந்தது.
கட்டுமான நிறுவனங்கள் தாங்கள் பெற்ற கடன் தொகைக்கு ஏற்ப இதற்கு கமிஷன் தொகையை வாரி வழங்கும். கடன் பெற தகுதி இல்லாத பெரிய நிறுவனங்கள்கூட வங்கிகளிடம் இருந்து கோடிக்கணக்கில் கடன் பெற்றுள்ளது என்றால் வங்கி அதிகாரிகளை அந்த அளவுக்கு Ôகவனித்துள்ளதுÕ.
வங்கிகளின் உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து இந்த ஆவணங்களின் அடிப்படையில் பெரும் தொகையை கட்டுமான நிறுவனங்களுக்கு பெற்றுத் தரும். கடன் வாங்கிக் கொடுத்ததற்கு பெரும் தொகையை கமிஷன் பெற்றுக் கொள்ளும். இந்த முறையில்தான் லஞ்சம், ஊழல் நடந்துள்ளது என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.
லஞ்சம் தான்; மோசடி அல்ல
ஹவுசிங் கடன் முறைகேடு தொடர்பாக வங்கி, எல்.ஐ.சி. உயர் அதிகாரிகள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கடன் முறைகேடு விவகாரம் நிதி மோசடி அல்ல. இது லஞ்சம், ஊழல் தொடர்பானது என்று சிபிஐ விளக்கம் அளித்துள்ளது. பூர்வாங்க விசாரணையில் இது லஞ்சம், ஊழல் சம்பந்தப்பட்டதுதான் என்று சிபிஐயின் சிறப்பு இயக்குனர் பல்விந்தர் சிங் தெரிவித்தார்.
சென்னையில் சோதனை...
கட்டுமான நிறுவனங்களுக்கு கோடிக் கணக்கில் கடன் தர பாங்க் ஆப் இந்தியா, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் பாங்க், எல்.ஐ.சி. மற்றும் எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் உட்பட பல அரசு வங்களின் உயர் அதிகாரிகள் இடைத்தரகராக செயல்பட்ட மணி மேட்டர்ஸ் நிறுவனத்திடம் இருந்து லட்சக் கணக்கில் லஞ்சம் பெற்றுள்ளனர்.
லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பாக சென்னை, ஜெய்ப்பூர், கொல்கத்தா, ஜலந்தர், டெல்லி மற்றும் மும்பையில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தியது. முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளது. இந்த முறைகேடுகள் தொடர்பாக 5 பிரிவுகளில் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
1000 கோடி ஊழல்
மணி மேட்டர்ஸ் நிறுவனத்தின் இடைத்தரகர் செயல்பாட்டின் மூலம் ணீ1,000 கோடி அளவுக்கு ஊழல் நடந்து இருக்கலாம் என்று சிபிஐ கூறியுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் விவரம்: எல்.ஐ.சி. செயலாளர் (முதலீடு) நரேஷ் கே.சோப்ரா, எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ராமச்சந்திரன் நாயர், சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவின் இயக்குனர் மணிந்தர்சிங் ஜோகர், பாங்க் ஆப் இந்தியாவின் பொது மேலாளர் ஆர்.என். தயாள், மணி மேட்டர்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ராஜேஷ் சர்மா, இதே நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் சுரேஷ் கட்டானி, சஞ்சய் சர்மா மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் துணை பொது மேலாளர் வெங்கோப குஜ்ஜால் ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
பங்கு சந்தையில் வீழ்ச்சி
எல்.ஐ.சி. மற்றும் வங்கிகளின் அதிகாரிகள் கைது செய்யப்பட்ட செய்தி, கடந்த 24ம் தேதி பங்கு சந்தையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பங்கு சந்தையில் எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் பங்கு மதிப்பு 18.32 சதவீதம், சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவின் பங்கு மதிப்பு 8.02 சதவீதம், மணி மேட்டர்ஸ் பங்கு மதிப்பு 19.99 சதவீதம் குறைந்தது. மணி மேட்டர்ஸ் பங்குகளை பெரிய அளவில் முதலீட்டாளர்கள் விற்றனர்.



-தினகரன்
" ஓட்டு போட்டால், இந்த செய்தி இன்னும் நிறைய பேரைப் போய் சேரும் .Please 

g.o.கூட்டுறவு வீட்டு வசதி

ஞாயிறு, 28 ஜூன், 2015

Vellore Tiruchy

சங்கம் நஷ்டத்தில்

http://www.dinamalar.com/index.aspகூட்டுச்சதி மூலம் ரூ.74 லட்சம் மோசடி செய்த அதிகாரிகள்ரூ.4 கோடி கடனில் மூழ்கிய கூட்டுறவு வீட்டுவசதி சங்கம்

ராசிபுரம்:ராசிபுரம் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம், நான்கு கோடி ரூபாய் அளவிற்கு கடனில் மூழ்கிய நிலையில், அதிகாரிகளின் கூட்டுச்சதியால், 74 லட்சம் ரூபாய் மோசடி நடந்தது அம்பலமாகியுள்ளது. இதுதொடர்பாக, இருவர் கைது செய்யப்பட்டனர்.கடந்த, 1991ம் ஆண்டு, ராசிபுரம் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் துவங்கப்பட்டு, இதில், 395 ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர். இவர்களுக்கு, நிலம் வாங்கி வீட்டுமனை பிரித்து கொடுக்க, ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, 160 பேர் மனைக்காக, முன்பணமாக தலா, 25 ஆயிரம் ரூபாய் செலுத்தினர்.இதில், ராசிபுரம் சிவானாந்தா சாலையில், 7.85 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு, எவருக்கும் நிலம் பிரித்து தரவில்லை. 2002ம் ஆண்டு, மார்ச் மாதம், சங்கத்தின் விதிமுறைக்கு எதிராக, 600க்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர்களை, தனி அலுவலர் திருப்பதி, செயலாளர் வேலாயுதம் ஆகியோர் போலியாக சேர்த்தனர்.
அவர்களிடம் இருந்து, ஒவ்வொரு உறுப்பினரிடம் இருந்தும், தலா ஒரு லட்சம் கடன் பெற்றுத் தருவதாக கூறி, கூட்டுறவு இணையத்தில் இருந்து, நான்கு கோடி ரூபாய் பெற்று, உறுப்பினர்களுக்கு பாதியளவு கடன் கொடுத்தனர். இதற்காக, இணையத்திடம் போலியான ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டது.
இந்த முறைகேடுகள் தொடர்பான புகார்கள், மாநில கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் வரை சென்றும், 2003ம் ஆண்டு முதல், நடப்பாண்டு வரை, முறையான தணிக்கைக்கு உட்படுத்தவில்லை. 2003ம் ஆண்டு தனி அலுவலராக இருந்த ஜெகநாதன், 2009ம் ஆண்டு, தனி அலுவலராக பொறுப்பேற்ற அரூர் தனசேகரன் ஆகியோர், ஏற்கனவே நடந்த மோசடி வேலைகளோடு கூட்டுச்சதி செய்து, அவர்களும், பல லட்சம் ரூபாய் மோசடி செய்தனர்.இதற்கிடையே, 2010ம் ஆண்டு, செயலாளர் வேலாயுதம், தனி அலுவலர் ஜெகநாதன் ஆகியோர், போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். அதன்பின், தனி அலுவலர் என்ற பதவி மாற்றப்பட்டு, ஃபோர்டு நிர்வாகம் வந்ததால், சங்கத்தின் செயல்பாடுகள் முழுமையாக முடங்கிப் போனது. ஏற்கனவே, போலி உறுப்பினர்களால் நான்கு கோடி ரூபாய் கடனும், திரும்ப பெற முடியாத நிலை உள்ளது.
இந்நிலையில், 2011ம் ஆண்டு சங்கத்தின் தனி அலுவலர் மற்றும் முறைகேடுகளை விசாரிக்கும் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட தனசேகரன், சேலம் மண்டல கூட்டுறவு சங்க துணை பதிவாளர் (வீட்டுவசதி) சேகரிடம், பல்வேறு முறைகேடுகள் தொடர்பான புகாரை கொடுத்தார்.
அவர், சேலம் வணிக குற்றப்புலனாய்வு போலீஸாரிடம் கொடுத்த புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சங்கத்தின் முன்னாள் செயலாளர் வேலாயுதம், தனி அலுவலர் ஜெகநாதன் ஆகிய இருவரையும், நேற்று முன்தினம் இரவு கைது செய்து விசாரிக்கிறார். மேலும், தலைமறைவாக உள்ள முன்னாள் தனி அலுவலர்கள் அரசு, அரூர் தனசேகரன் ஆகியோரை, போலீஸார் தேடி வருகின்றனர்.
ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் கூட்டுறவு வீட்டு வசதி சங்க தலைவர் மதியழகன் கூறியதாவது:கூட்டுறவு இணையத்தின் மூலம் பெறப்பட்ட கடன், நான்கு கோடி ரூபாய் வசூலிக்க முடியாமல் உள்ளது. இதில், 300 உறுப்பினர்கள் கடனாகவும், 160 உறுப்பினர்கள் நிலத்தின் மீதும் கடன் பெற்றனர். தற்போது, சங்கம் நஷ்டத்தில் செயல்பட்டு வருகிறது.

சனி, 27 ஜூன், 2015

தமிழில் இதற்கு மேலேயும் முடியும்....?

கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் 695 ஊழியர்கள் பணி நீக்க உத்தரவு நிறுத்தி வைப்பு


கூட்டுறவு வீட்டு வசதி சங்கம்
695 ஊழியர்கள் பணி நீக்க உத்தரவு நிறுத்தி வைப்பு
சேலம், டிச.11_ தமிழ்-நாடு முழுவதும் 1,117 கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களில் 4 ஆயிரம் பேர் பணியாற்று-கின்றனர். இந்த சங்கங்கள் மூலம் வழங்கப்பட்ட ரூ.2 ஆயிரம் கோடி கடன் வசூலாகாமல் உள்ளது. இதனால், ஊழியர்களுக்கு சம்பளத்தை நிறுத்தி வைத்து, தமிழ்நாடு கூட்டு-றவு வீட்டுவசதி இணை-யம் உத்தரவிட்டது. கடந்த அக்டோபர் முதல் ஊழியர்கள் சம்பளமின்றி பணியாற்றுகின்றனர். இதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் 303 கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களில் உபரியாக உள்ள 695 பணியாளர்-களை பணிநீக்கம் செய்ய கடந்த சில நாள்களுக்கு முன் உத்தரவிடப்-பட்டது.
இந்த உத்தரவை நிறுத்தி வைக்குமாறு தொமுச தலைவர் குப்பு-சாமி, பொதுச்செய-லாளர் சண்முகம் ஆகி-யோர் முதல்வர் கலைஞ-ரியிடம் கோரிக்கை வைத்-தனர். இதையடுத்து, பணிநீக்கம் செய்ய பிறப்-பித்த உத்தரவை, நிறுத்தி வைத்து பதிவாளர் டி.பி.-யாதவ் நேற்று உத்தர-விட்டார்
Last updated 01/31/2012 

ட்டுவசதி தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி இணையம் கடன் பெற்று தவணை தவறிய உறுப்பினர்களுக்கு தள்ளுபடி சலுகைகள் வழங்கியது தவணை தவறிய உறுப்பினர்கள் கடனை செலுத்த முன்வருபவர்களுக்கு தவணை தவறிய தொகைக்கான வட்டி மற்றும் தவணை தவறிய அபராத வட்டியினை முழுமையாக தள்ளுபடி

வீட்டுவசதி - பொருளாதாரத்தில் நலிவுற்ற ஏழை எளியோருக்காக ஊரக வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கடன்கள், நிலுவையில் உள்ள வட்டி, அபராத வட்டி மற்றும் சேவைக் கட்டணம் ஆகியவற்றை தள்ளுபடி செய்து அரசு ஆணை வெளியிடப்படுகிறது.

திங்கள், 22 ஜூன், 2015

ஜெயலலிதா இதைச் செய்வாரா?

HeadlinesTV.in

திறப்பு விழாக்கள், அறிவிப்புகளை தவிர உருப்படியான ஆட்சி நடக்கிறதா - ஈ வீ கே எஸ் கேள்வி
தமிழக மக்களின் பல்வேறு பிரச்சனைகள் தீர்வதற்கு ஆட்சியில் அமைச்சர்களாக இருப்பவர்கள் தலைமை செயலகத்திற்கு வருகை புரிந்து எந்த நடவடிக்கையும் எடுக்க எவரும் முன் வரவில்லை. இதனால் மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் மலைபோல் குவிந்துள்ளன. தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு வீட்டு வசதி கடன் பெற்ற ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த விவசாயம், கைத்தறி, தச்சு வேலை, கொத்தனார், கூலித் தொழில் செய்து பிழைத்து வரும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் பல்வேறு இன்னல்களுக்கும், தொல்லைகளுக்கும் ஆளாகி வருகின்றார்கள். இவர்களது வறுமை நிலைமையின் காரணமாக வட்டி மற்றும் அபராத வட்டியை தள்ளுபடி செய்வதோடு, அசல் தொகையையும் ரத்து செய்ய வேண்டுமென்று கோரி கடந்த 10 ஆண்டுகளாக போராடி வருகிறார்கள்.

வறுமையில் உழன்று வரும் இவர்களது கோரிக்கையை செவிமடுக்க ஆட்சியாளர்கள் தயாராக இல்லை. கடந்த 24.9.2010 அன்று வெளியிட்ட அறிக்கையும், 2011 சட்டமன்ற அதிமுக தேர்தல் அறிக்கையிலும் கூட்டுறவு வீட்டு வசதி கடனுக்கான வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி செய்து அசல் தொகையை மட்டுமே செலுத்த வாய்ப்பளிக்க வேண்டுமென்று ஜெயலலிதாவின் கோரிக்கையை அனைத்து ஊடகங்களிலும் வெளியிடப்பட்டதை எவரும் மறந்திருக்க மாட்டார்கள்.
ஜெயலலிதாவும் மறந்திருக்க மாட்டார். ஆனால், அதே ஜெயலலிதா முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அவரது ஆணையின் அடிப்படையில் கொடுத்த வாக்குறுதிகளை அப்பட்டமாக மீறுகிற வகையில் எந்த சலுகைகளும் அளிக்காமல் முழு கடனையும் ஓரே தவணையில் கட்டவேண்டுமென்று கெடுபிடி செய்து துன்புறுத்தி வருகிறார்கள். அப்படி கட்டாவிட்டால் ஏழை எளிய மக்களின் வீட்டை ஜப்தி செய்து ஏலத்தில் விடுவோம் என்று கடுமையாக மிரட்டுவதோடு அதற்கான அறிவிப்புகளையும் நாளேடுகளில் வெளியிட்டு வருகிறார்கள்.
ஏற்கனவே மன உளைச்சல் காரணமாக, இப்பிரச்சனையில் 9 பேர் தற்கொலை செய்துள்ளார்கள். மேலும் பலர் தற்கொலை செய்வதற்கான அபாயகரமான சூழல் உருவாகி வருகிறது. எனவே, ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுகிற வகையில் கூட்டுறவு வீட்டு வசதி சங்கக் கடன் பெற்ற அனைவர் மீதும் எடுக்கப்பட்டு வரும் ஜப்தி, ஏல நடவடிக்கைகளை முழுமையாக கைவிட்டு, கடன் தொகை முழுவதையும் ரத்து செய்து, அவர்களுக்கு நிவாரணம் வழங்கி ஏழை எளிய மக்களை வாழ வைக்க முயற்சி செய்ய வேண்டும். 'மக்கள் முதல்வர்' என்று கூறிக் கொள்ளும் ஜெயலலிதா இதைச் செய்வாரா?  என்று அந்த அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
  • Jun 17, 2015

ஞாயிறு, 21 ஜூன், 2015

56,830 சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள்


சென்னை,

ரூ.1,096 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 56 ஆயிரத்து 830 சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகளை, முதல்-அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடங்கள்

விழுப்புரம் மாவட்டம் - கண்டமங்கலத்தில் 17 ஆயிரம் சதுர அடி கட்டிட பரப்பளவில், தரை மற்றும் முதல் தளத்துடன், வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம்,கூட்டரங்கம், பயிற்சிக்கூடம் உள்ளிட்ட வசதிகளுடன்1 கோடியே 73 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடத்தை, முதல்-அமைச்சர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

மேலும், காஞ்சீபுரம், அரியலூர், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருப்பூர், திருவள்ளூர், தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் 62 கோடியே 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 35 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடங்கள்;

கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சீபுரம், கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருச்சிராப்பள்ளி, வேலூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் 7 கோடியே 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 75 ஊராட்சி அலுவலகக் கட்டிடங்கள்;

பசுமை வீடுகள்

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் 1,095 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முதல்-அமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டத்தின்கீழ் கட்டப்பட்டுள்ள 56,830 சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள்;

அரியலூர், திண்டுக்கல், காஞ்சீபுரம், நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம், சிவகங்கை, திருநெல்வேலி, திருவள்ளூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருவாரூர், திருச்சிராப்பள்ளி, வேலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் 24 கோடியே 72 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 193 கிராம ஊராட்சி சேவை மையங்கள்;

சேவை மையங்கள்

அரியலூர்- தா.பழூர் மற்றும் திருமானூர், மயிலாடுதுறை, சங்கரன்கோவில், எல்லாபுரம் ஆகிய இடங்களில் 1 கோடியே 33 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5 வட்டார ஊராட்சி சேவை மையங்கள்;

காட்டாங்கொளத்தூர், கந்தர்வகோட்டை, வாலாஜா மற்றும் கே.வி.குப்பம், அரியலூர் ஆகிய இடங்களில் 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 9 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிக் கட்டிடங்கள்;

பாலங்கள்

சிவகங்கை- கல்லல், காளையார்கோவில் மற்றும் திருப்பத்தூர், திருமயம், உதகமண்டலம் ஆகிய இடங்களில் 68 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5 சமுதாயக்கூடங்கள்;

காவேரிப்பட்டினம் மற்றும் வேப்பனஹள்ளி, வாழப்பாடி மற்றும் அயோத்தியாபட்டணம், தேவகோட்டை மற்றும் இளையான்குடி, மணிகண்டம், ரிஷிவந்தியம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் 13 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 10 பாலங்கள்;

ரூ.1,214 கோடி செலவில்...

மொடக்குறிச்சி ஒன்றியத்தில் 46 புதூர், ராமநாதபுரம் ஒன்றியத்தில் தேவிபட்டினம், பல்லடம் ஒன்றியத்தில் கோடங்கிபாளையம், விருதுநகர் ஒன்றியத்தில் கோட்டையூர் ஆகிய இடங்களில் 6 கோடியே 28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 4 பேருந்து நிலையங்கள் போன்றவற்றை முதல்-அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார். இவைகளின் மொத்த மதிப்பு ரூ.1,214 கோடியே 18 லட்சம் ஆகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.