புதன், 17 ஜூன், 2015
தவணை தவறிய உறுப்பினர்கள் மீது சட்ட நடவடிக்கை: கூட்டுறவு வீட்டுவசதி துறை அதிரடி
நாள்
Dinamalar
21பிப்வணை தவறிய உறுப்பினர்கள் மீது சட்ட நடவடிக்கை: கூட்டுறவு வீட்டுவசதி துறை அதிரடி
2015
21:15
வீட்டுவசதி சங்கங்களில் தவணை தவறிய உறுப்பினர்களின் சொத்து களை கையகப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க, கூட்டுறவு வீட்டு வசதி துறை உயர் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில், கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களில், 1.30 லட்சம் உறுப்பினர்கள், தவணை தவறியவர்களாக இருந்தனர். இதனால், சங்கங்கள் புதிய கடன்கள் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.
தள்ளுபடி:
இதை கருத்தில் கொண்டு, 2008ம் ஆண்டு முதல், 2014 வரை அபராத வட்டி தள்ளுபடி திட்டம் அறிவிக்கப்பட்டது. இதை பயன்படுத்தி, இதுவரை, 56,377 உறுப்பினர்கள் பயன் அடைந்துள்ளனர். கூட்டுறவு சங்கங்களுக்கும், 888.71 கோடி நிலுவை தொகை வசூலாகி உள்ளது. இத்திட்டம் முடிவுஅடைந்த நிலையில், புதிதாக நிலுவை தொகை வசூலாவது தடைப்பட்டு உள்ளது. இதனால், வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு, கூட்டுறவு வீட்டுவசதி துறை செலுத்த வேண்டிய தவணையை கூட, செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அபராத வட்டி தள்ளுபடி திட்டத்துக்குப் பின்பும், நிலுவையில் உள்ள தொகை குறித்த விவரங்கள் குறித்தும், இதை வசூலிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இத்துறை உயர் அதிகாரிகள் ஆலோசித்து வந்தனர். இதில், தற்போதைய நிலவரப்படி, கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில், 74,314 உறுப்பினர்கள் தவணை தவறியவர்களாக உள்ளனர். இவர்களிடம் இருந்து அசல், வட்டி, அபராத வட்டி என, மொத்தம், 2,085 கோடி ரூபாய் வசூலாக வேண்டி உள்ளது. இதை வசூலிக்க, துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்இதுகுறித்து, கூட்டுட்டுவசதி துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: தவணை தவறிய உறுப்பினர்களிடம் இருந்து நிலுவை தொகையை வசூலித்தால் மட்டுமே, வங்கிகளுக்கான தவணையை செலுத்த முடியும் என்ற நிலைக்கு, இத்துறை தள்ளப்பட்டு உள்ளது. எனவே, முதன்மை சங்கங்களில் தவணை தவறிய உறுப்பினர்களிடம் இருந்து, நிலுவை தொகையை வசூலிக்க, சில கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டி உள்ளது. கடந்த, 1983ம் ஆண்டு கூட்டுறவு சங்கங்களின், 143வது பிரிவின்படி, தவணை தவறிய அனைத்து உறுப்பினர்கள் மீதும், சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
சொத்துகள்:
அதன்படி, தவணை தவறிய உறுப்பினர்களின் சொத்துகள் கையகப்படுத்தப்படும். நிலுவை தொகையில் அசலுக்கான வட்டியை செலுத்த வருவோருக்கு, அபராத வட்டியை தள்ளுபடி செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன், இதற்கான பணிகள் துவங்கும். இவ்வாறு, அவர் கூறினார்.
- நமது நிருபர் -
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக