செய்திகள்
![]()
வீட்டு வசதி சங்கங்களின் ஜப்தி நடவடிக்கையை நிறுத்த வேண்டும்: தா. பாண்டியன்
First Published : 06 Apr 2010 04:07:32 PM IST
Last Updated :
சென்னை, ஏப்.6- வீட்டு வசதி சங்கங்களின் கீழ் கடன் பெற்று உரிய நேரத்தில் செலுத்தாதவர்களின் வீடுகளை ஜப்தி செய்து ஏலத்தில் விடும் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழ் நாட்டில், வீடற்றவர்கள் வீடுகட்டிக் கொள்வதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டவை தமிழகத்தில் நகர்புற மற்றும் கிராப்புற கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள். இதன் மூலம் கடன் வழங்கப்பட்டு, நலிவுற்றவர்களுக்கு வீடு கட்டிக் கொள்ள உதவி செய்யப்பட்டது.
பெற்ற கடனுக்கு, அபராதவட்டி, கூட்டுவட்டி என்று வட்டி மேல் வட்டி போட்டு, வீடுகள் ஜப்தி செய்யப்பட்டு, இப்பொழுது மீண்டும் இவர்கள் வீடற்றவர்களுக்கப்பட்டு வருகிறனார்கள்.
பல இடங்களில் ஜப்தி நடவடிக்கைகள் கூடுதலாகியுள்ளது. இதனால், ஏழை, எளிய மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியிருக்கின்றனர்.
இதில் அரசு உடன் தலையீட்டு, அவர்களுடன் கலந்தாய்வு நடத்தி பிரச்சனைய முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்றும் அதுவரை ஏல விற்பனை நடவடிக்கைகள் எதுவும் செய்யக்கூடாது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக