http://www.vikatan.com/static/images/nanayam-logo.png
தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் 1 லட்சம் கோடி வங்கிக் கடன் தள்ளுபடி!
ஆந்திர மாநில அரசாங்கமும் புதிதாக தோன்றியுள்ள தெலுங்கானா மாநிலத்தின்அரசாங்கமும் ஏறக்குறைய 1 லட்சம் கோடி ரூபாய்க்கான வங்கிக் கடனை தள்ளுபடி செய்யதிட்டம் தீட்டி வருகிறது. இந்த தள்ளுபடி மட்டும் நிஜமாகும் பட்சத்தில் இந்தியவரலாற்றிலேயே இதுதான் மிகப் பெரிய கடன் தள்ளுபடியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
பத்து ஆண்டுகளுக்குப்பின் ஆட்சிப் பொறுப்பில் வந்திருக்கும் தெலுங்கு கட்சியானது தனதுதேர்தல் அறிக்கையில், ஆந்திரா முழுக்க விவசாயிகளும் சுய உதவிக் குழுக்களும் பெற்ற80,000 கோடி வங்கிக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என உறுதி அளித்திருந்தார்.
புதிய உருவாகி இருக்கும் தெலுங்கானா மாநிலத்தில் 1 லட்சம் ரூபாய் வங்கிக் கடன் பெற்றஅனைத்து விவசாயிகளின் கடனும் தள்ளுபடி செய்யப்படும் என தெலுங்கானா ராஷ்ட்ரியசமீதி கட்சியும் அறிவித்திருந்தது. இது மட்டுமே ஏறக்குறைய 20,000 கோடி ரூபாய் இருக்கும்என்று சொல்லப்படுகிறது.
இந்தத் தகவல் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் சுய உதவிக் குழுக்களிடம்மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்கி வட்டாரத்திலும் இந்தத் தகவல் மகிழ்ச்சியைஏற்படுத்தி இருப்பது ஆச்சரியமான விஷயம்தான். காரணம், வராக் கடனாக இருந்த கடன்கள்தற்போது அரசாங்கமே ஏற்றுக்கொள்ள யோசித்து வருவதால், வங்கிக்கு கிடைக்க வேண்டியபணம் எந்தப் பிரச்னையும் இல்லாமல் திரும்பக் கிடைக்கும் என வங்கிகள் கருதுகின்றன.
எனினும், இவ்வளவு பெரிய கடன் தள்ளுபடியை செய்துவிட்டு, ஆந்திரா மற்றும் தெலுங்கானாஅரசாங்கம் எதிர்காலத்தில் வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதிக்கு என்ன செய்யும் என்பதுதான்முக்கியமான கேள்வி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக