வியாழன், 23 ஜூலை, 2015

கூட்டுறவு வீட்டு வசதி சங்க கடன்களை தள்ளுபடி செய்யக் கோரி தர்னா

Dinamani

கூட்டுறவு வீட்டு வசதி சங்க கடன்களை தள்ளுபடி செய்யக் கோரி தர்னா

First Published : 21 July 2015 03:36 AM IST
கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் பெறப்பட்ட கடன்களைத் தள்ளுபடி செய்யக் கோரி, கூட்டுறவு பயனீட்டாளர்கள் நலச் சங்கத்தினர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வீடு வசதி சங்கங்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் ரூ.ஒரு லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வீடு கட்டவும் வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்தும் கடன் பெற்றுள்ளனர். கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களுக்கு ஜப்தி அறிவிப்பு நோட்டீûஸ அதிகாரிகள் வழங்கி வருகின்றனர்.
தமிழ்நாடு கூட்டுறவு பயனீட்டாளர்கள் நலச் சங்கத்தின் மாநிலச் செயலர் ஜி.கே.பிரபாகரன் தலைமையில்
100-க்கும் மேற்பட்டோர், கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் பெற்ற கடன்களைத் தள்ளுபடி செய்யவும் பெற்ற கடன்களுக்காக வீட்டை ஏலம், ஜப்தி நடவடிக்கைகள் மேற்கொள்வதைத் தடுக்க வலியுறுத்தியும் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர். இவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள குறைதீர் கூட்டரங்கின் வாயிலில் திடீரென அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து பிரபாகரன் கூறியது: தமிழக அரசு கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் ஏழை விவசாயிகள், நெசவாளர்கள் பெற்ற கடன்களுக்காக, அவர்களின் வீடுகளை ஏலம், ஜப்தி நடவடிக்கைகள் மேற்கொள்வதை உடனடியாக நிறுத்த வேண்டும். கூட்டுறவு விதிமுறையை மீறி கந்து வட்டியைவிட அதிகமாக அபராத வட்டியிடுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
இந்த சங்கங்களில் ரூ.2 லட்சம் வரை பெற்ற கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும். கூட்டுறவு விதிமுறைகளுக்கு முரணாகப் பெற்ற வட்டித் தொகையை அசலுக்கு வரவு வைத்து, மீதமுள்ள கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும்.
கூட்டுறவுத் தலைவர், செயலர் ஆகியோர் அடியாள்களைக் கொண்டு வட்டி கட்ட முடியாத ஏழை விவசாயிகள், நெசவாளர்களை மிரட்டி அவர்களது வீட்டை அபகரிக்கும் செயல் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து, தங்கள் கோரிக்கைளை வலியுறுத்தினர். இதைக் கேட்ட மாவட்ட ஆட்சியர் வி.சம்பத், கூட்டுறவுத்துறை அதிகாரிகள், வருவாய்க் கோட்டாட்சியர்கள் தலைமையில் கூட்டம் நடத்தி இந்தப் பிரச்னை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக