புதன், 15 ஜூலை, 2015

பட்ஜெட்டில் வீட்டு வசதி கடனுக்கான அசல் – வட்டி தள்ளுபடி

புதுச்சேரி செய்திகள்You Are Here: Home » முக்கிய செய்திகள் » பட்ஜெட்டில் வீட்டு வசதி கடனுக்கான அசல் – வட்டி தள்ளுபடி

பட்ஜெட்டில் வீட்டு வசதி கடனுக்கான அசல் – வட்டி தள்ளுபடி

Posted by  on August 24, 2011 // Leave Your Comment
Puducherry House / புதுச்சேரி வீடு
புதுச்சேரி, ஆக. 24: பட்ஜெட்டில் வீட்டு வசதி கடனுக்கான அசல் – வட்டி தள்ளுபடி செய்து முதலவர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் உரை வருமாறு:
புதுச்சேரி பகுதியில் உள்ள புதுச்சேரி கூட்டுறவு சர்க்கரை ஆலை மற்றும் புதுச்சேரி கூட்டுறவு சர்க்கரை ஆலை மற்றும் புதுச்சேரி கூட்டுறவு நூற்பாலை, காரைக்கால் பகுதியிலுள்ள ஜெயபிரகாஷ் நாராயண் கூட்டுறவு நூற்பாலை ஆகியவற்றை நவீனப்படுத்தி உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும். புதுச்சேரி மாநிலத்தில் செயல்பட்டுவரும் கூட்டுறவு நூற்பாலை ஆகியவற்றை நவீனப்படுத்தி உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
புதுச்சேரி மாநிலத்தில் செயல்பட்டுவரும் கூட்டுறவு சங்கங்களைப் புனரமைக்கும் விதமாக வல்லுநர்குழு அமைத்து அவைகளை சீரமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களின் உறுப்பினர்களால் பெறப்பட்ட கடன்களின் மீதான வட்டி மற்றும் அபராத வட்டிகளை தள்ளுபடி செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. குறைந்த வருவாய் பிரிவினர் கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் மூலம் பெறப்பட்ட தவணை கடந்த அசலை ரூ. 1 லட்சம் வரை தள்ளுபடி செய்ய எனது அரசு உத்தேசித்துள்ளது.
பால் பற்றாக்குறையை நீக்கவும், பால் உற்பத்தியை பெருக்கவும் பிரதம கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பாலுக்கு ஆதரவு விலையாக லிட்டர் ஒன்றுக்கு ரூ. 1 கூடுதலாக வழங்க எனது அரசு முடிவெடுத்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் நெசவாளர்களின் வாழ்க்கை தரம் உயரவும், அவர்களுக்கு தடையில்லா வேலை வழங்கவும் பாண்டெக்ஸ் மற்றும் பாண்பேப் மூலமாக கைத்தறி ஆடைகள் உற்பத்தி செய்யப்பட்டு அரசுத் துறைகளுக்கு விற்கப்படும்.
நெசவாளர்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச ஓய்வூதியம் முறையே ரூ. 1000 மற்றும் 1,250ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஏழை மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள பிரிவினரின் வாழ்க்கைத் தரம் உயர, “புதுச்சேரி பல்நோக்கு சேவை வழங்கும் கூட்டுறவு சங்கம்” என்னும் ஒரு புதிய சங்கத்தை துவங்க எனது அரசு உத்தேசித்துள்ளது. நாள் ஒன்றுக்கு 1,750 டன் அரைவை திறன் கொண்ட புதுச்சேரி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் அரைவைத் திறன் 3 ஆயிரம் டன்னாக உயர்த்திடும் வகையில், தேசிய கூட்டுறவு அபிவிருத்தி கழகத்திடமிருந்து கடன் பெற்று நவீனப்படுத்தப்படும்.
நடப்பு ஆண்டில் விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க் கடன், துவக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வழங்கப்படும். இதனால் சுமார் 5 ஆயிரம் பயனாளிகள் பயனடைவார்கள். கூட்டுறவு இணையத்தின் மூலம் தொழிற்பயிற்சி நிறவனம் ஒன்ற அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
- See more at: http://puducherrynews.com/?p=13861#sthash.JezpyYRw.dpuf

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக