வியாழன், 23 ஜூலை, 2015

வாங்காத கடனுக்கு ஜப்தி அறிக்கை: பாமக போராட்ட அறிவிப்பு



வாங்காத கடனுக்கு ஜப்தி அறிக்கை: பாமக போராட்ட அறிவிப்பு

(8 Apr) நாமக்கல், ஏப். 7: கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில், வாங்காத கடனுக்கு ஜப்தி அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து போராட்டம் நடத்தப் போவதாக பாமக அறிவித்துள்ளது. நாமக்கல் மாவட்ட பாமக நிர்வாகக் குழுக் கூட்டம், மாநில துணைப் பொதுச்செயலர் பொ.ரமேஷ் தலைமையில் நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலர் ஒ.பி.பொன்னுசாமி, மாவட்டத் தலைவர்கள் கி.தமிழ்வாணன், டி.ஆர்.லோகநாதன், இரா.பழனிச்சாமி முன்னிலை வகித்தனர். ராசிபுரம் நகரச் செயலர் ஆ.மோகன்ராஜ் வரவேற்றார். மாநில துணைத் தலைவர் ச.வடிவேலன் பேசினார். ராசிபுரம் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் வீடு கட்ட கடன் கொடுப்பதாகக் கூறி, ஆவணங்களை மட்டும் வாங்கி வைத்துக்கொண்டு கடன் கொடுக்கவில்லை. இப்போது கடன் வாங்காதவர்களுக்கும் ஜப்தி அறிக்கை வந்துள்ளது. இதனால், சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்க ஊழியர்கள் மீது நடவடிக்கையெடுக்க வேண்டும். மேலும், இந்தக் கடனை தள்ளுபடி செய்வதோடு, அடமான பத்திரங்களை திருப்பிக் கொடுக்க வேண்டும். இக் கோரிக்கையை வலியுறுத்தி வரும் 15-ஆம் தேதி ராசிபுரம் புதிய பேருந்து

நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பொ.ரமேஷ் தெரிவித்தார்.
http://tamil.oneindia.com/news/2010/09/23/loans-help-poor-farmers-jaya.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக